அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்: விசாரணையை துவக்கியது 'அமேசான்'

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:'அமேசான் இந்தியா' நிறுவனத்தின் சட்டப்பிரதிநிதிகள் மீது, லஞ்சம் குறித்த புகார்கள் எழுந்த நிலையில், இது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளதாக, அமேசான் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ செய்யாமல், 'ஊழலை நிறுவனம் சகித்துக் கொள்ளாது' என அமேசான் தெரிவித்துள்ளது.'தி மார்னிங் கான்டெக்ஸ்ட்' தொழில்நுட்பம் மற்றும் வணிகம்
அரசு அதிகாரிகள், லஞ்சம், விசாரணை, அமேசான்

புதுடில்லி:'அமேசான் இந்தியா' நிறுவனத்தின் சட்டப்பிரதிநிதிகள் மீது, லஞ்சம் குறித்த புகார்கள் எழுந்த நிலையில், இது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளதாக, அமேசான் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ செய்யாமல், 'ஊழலை நிறுவனம் சகித்துக் கொள்ளாது' என அமேசான் தெரிவித்துள்ளது.

'தி மார்னிங் கான்டெக்ஸ்ட்' தொழில்நுட்பம் மற்றும் வணிகம் குறித்த செய்தி நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் சட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு குறித்து, ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில், அமேசானின் இந்திய சட்ட குழு, அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தி வெளியானதை அடுத்து, அமேசான், அதன் சட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக விசாரணையைத் துவக்கியுள்ளது.இந்த விவகாரத்தில், அதன் மூத்த நிறுவன ஆலோசகர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இருப்பினும், குற்றச்சாட்டு குறித்த விரிவான தகவல்களையோ அல்லது விசாரணை எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பதையோ தெரிவிக்க இயலாது என, அமேசான் கூறியுள்ளது.


latest tamil news



அமேசான், இந்தியாவில் சந்தை போட்டி விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, இந்திய சந்தைகள் போட்டி ஆணையத்தின் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, 'பியூச்சர் குழுமம்' அதன் வணிகங்கள் சிலவற்றை, 'ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்' நிறுவனத்துக்கு 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததை எதிர்த்து, சிங்கப்பூர் சர்வதேச நடுவர்மன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து தடை பெற்றிருக்கிறது, அமேசான்

இதற்கிடையே, பியூச்சர் குழுமம் இது சம்பந்தமாக, அமேசானுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளது.இப்படி அண்மைக் காலமாக பல வழக்குகளை மேற்கொண்டு வருகிறது அமேசான். இந்நிலையில், அதன் சட்ட பிரதிநிதிகள் மீது லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202117:12:20 IST Report Abuse
ஆரூர் ரங் பியூசர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்கியதை எதிர்த்து 😛அமேசான் போட்ட வழக்கில் அமேசான்க்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட். அண்மையில் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காசு பணம் துட்டு மணி மணி 🤔🤔
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் என்ன நடக்குது நாட்ல மோடி கலெக்ஷன் கரப்ஷன் இல்லாதவராச்சே அவர் ஆட்சியிலா இப்படி? கடல்கடந்தும் நாறிடுமே இந்தியா மானம் காக்கப் பட வேண்டும்
Rate this:
Cancel
ஜெய்கிந்த்புரம் - Madurai,இந்தியா
21-செப்-202111:28:01 IST Report Abuse
ஜெய்கிந்த்புரம் PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X