பயன்பாட்டுக்கு வராத அரசு ஏ.சி., பஸ்கள்: தினமும் ரூ.1.25 கோடி வருவாய் இழப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வராத அரசு ஏ.சி., பஸ்கள்: தினமும் ரூ.1.25 கோடி வருவாய் இழப்பு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (7)
Share
சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஏ.சி., பஸ்கள் 18 மாதங்களாக இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 250 ஏ.சி., பஸ்கள் உள்ளன. ஒரு ஏ.சி., பஸ் விலை சுமார் ரூ.24 லட்சமாகும். இந்த பஸ்கள்
TAMILNADU, GOVT, AC BUS, NO RUNNIG, HEAVY LOSS, தமிழகம், அரசு ஏசி பஸ்கள், ஓடவில்லை, வருவாய் இழப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஏ.சி., பஸ்கள் 18 மாதங்களாக இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 250 ஏ.சி., பஸ்கள் உள்ளன. ஒரு ஏ.சி., பஸ் விலை சுமார் ரூ.24 லட்சமாகும். இந்த பஸ்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்க்கப்பட்டன.

கொரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச் கடைசி வாரத்தில் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏ.சி., அறைகளில் இருப்பவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பிருந்ததால் ஏ.சி., பஸ்கள் இயக்கப்படவில்லை. கொரோனா 2-ம் அலை பரவியபோது சில மாதங்கள் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் பரவல் குறைந்ததால் பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போதும் ஏ.சி., பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால் புதிதாக வாங்கப்பட்ட ஏ.சி., பஸ்கள் கடந்த 18 மாதங்களாக இயக்கப்படாமல் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் பஸ்ஸூம், அதில் உள்ள ஏ.சி., இயந்திரமும் பழுதடைந்து வருகின்றன.ஏ.சி., பஸ்களில் தினமும் ஒரு பஸ்ஸூக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வருவாய் கிடைத்தது. அந்த வகையில் 250 பஸ்களுக்கும் சேர்ந்து தினமும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.


latest tamil news


இது குறித்து அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளனத்தின் இணைப் பொதுச் செயலர் சம்பத் கூறியதாவது:

விமானத்தில் ஏ.சி., ரயிலில் ஏ.சி., தனியார் ஏ.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பெரிய கடைகளில் ஏ.சி., பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. இதனால் ஏ.சி., பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.சி., பஸ்களை தொடர்ந்து இயக்காமல் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் ஏ.சி., இயந்திரங்கள் பழுதடையும். அதை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டு வர பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டி வரும். டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்குவரத்துக் கழகங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வரும் நிலையில், ஏ.சி., பேருந்துகளை மீண்டும் இயக்கினால் வருவாய் இழப்பை ஓரளவு சரி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X