அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது: கமல்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும், கடந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி
MNM, Kamalhaasan, Village Council Meeting, மநீம, கமல், கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், கிராம சபை கூட்டம், அதிகாரம்

சென்னை: ‛‛தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும், கடந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‛‛கொரோனாவில் சட்டசபை தேர்தல், ஓட்டு எண்ணிக்கை, சட்டசபை கூட்டம், உள்ளாட்சி தேர்தல் ஆகியவை நடக்கும், ஆனால், கிராம சபை கூட்டம் மட்டும் நடக்காது. அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை,'' என விமர்சித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டதாவது:

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
21-செப்-202119:50:39 IST Report Abuse
Vena Suna கொரோனா பரவும்னு கிராம சபை கூட கூடாதுன்னு சொன்னதை இப்படி அரசியல் ஆக்குகிறீர்?
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
21-செப்-202118:04:34 IST Report Abuse
vns இவனுடைய பேச்சை கேட்பதும் படிப்பதும் பேச்சுக்கெல்லாம் கருத்து போடுவதும் நமது பொழுதை வீணடிக்கும் செயல். வீணன். ஒழுக்கமில்லாத ...
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
21-செப்-202117:35:42 IST Report Abuse
Rengaraj இதே போன்று பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சி அமைப்புகளுக்கும் சிறப்பு அதிகாரங்கள் இருக்கும். அவற்றை அந்த அந்த நிர்வாகம் சிறப்பாக கையாள வேண்டும். குப்பை அகற்றம், சாக்கடை நீர் தேங்காதிருத்தல், தெருவிளக்கு பராமரிப்பு, , குடிநீர் விநியோகம், சாலை பராமரிப்பு, , முறையான அறிவிப்புடன் கூடிய வரி வசூல் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு அதிகாரம் இருக்கும். அதில் யாரும் தலையிட முடியாது என்று கூட சொல்லப்பட்டிருக்கும் . இதை பற்றி யாரும் பேசாமல் உள்ளூர் பிரச்சனை என்றாலும் கூட உடனே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிரதம மந்திரி, ஜனாதிபதி இப்படி ஆளாளுக்கு நாட்டை விமர்சிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X