அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது: கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது: கமல்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (23)
Share
சென்னை: ‛‛தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும், கடந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி
MNM, Kamalhaasan, Village Council Meeting, மநீம, கமல், கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், கிராம சபை கூட்டம், அதிகாரம்

சென்னை: ‛‛தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும், கடந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‛‛கொரோனாவில் சட்டசபை தேர்தல், ஓட்டு எண்ணிக்கை, சட்டசபை கூட்டம், உள்ளாட்சி தேர்தல் ஆகியவை நடக்கும், ஆனால், கிராம சபை கூட்டம் மட்டும் நடக்காது. அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை,'' என விமர்சித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டதாவது:

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X