பொது செய்தி

இந்தியா

பாக்., சென்ற சீன கப்பலில் ஆயுதம் கடத்தல்: வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றம்

Added : செப் 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு குஜராத் வழியாக சென்ற சீனக் கப்பலில் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் சீன சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் குஜராத்தின் காண்ட்லா துறைமுகப் பகுதியை கடந்த போது, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சாய

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு குஜராத் வழியாக சென்ற சீனக் கப்பலில் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டு உள்ளது.latest tamil newsசீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் சீன சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் குஜராத்தின் காண்ட்லா துறைமுகப் பகுதியை கடந்த போது, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சாய ஆலைக்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்வதாக சீன கப்பலின் மாலுமிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் அந்த கப்பலில் ஏவுகணைகள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து சீன கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.


latest tamil newsஇதுகுறித்து வருவாய் புலனாய்வு துறை (டிஆர்ஐ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.,) உதவி கோரப்பட்டது. டி.ஆர்.டி.ஓ., நிபுணர்களின் ஆய்வில் கப்பலில் இருந்த உபகரணங்கள் ஏவுகணை தயாரிப்பதற்கான ஆயுதங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

தேச பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கு, தற்போது தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப் பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
21-செப்-202119:20:24 IST Report Abuse
M  Ramachandran ஏன் சீனா அவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள தரை மார்க்கத்தை படுத்த வில்லையை. தீவிரவாதிகள் மூலம் அதை இந்தியா அருகில் வரும்போது அப்படி கடத்தி இந்தியா வின் உள்ளே காஷ்மீர் வழியாக எளிதாக கொண்டு வரமுடியுமெ? நேரிடையாகவே அவர்கள் இந்தியாவை தாக்காலமெ?
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
21-செப்-202115:27:38 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சம்பவம் இப்பதான் யாரு விசாரிக்கணும்ன்னு முடிவாயிருக்கு பேஷ் பேஷ்
Rate this:
enkeyem - sathy,இந்தியா
21-செப்-202117:03:06 IST Report Abuse
enkeyemஇதே குடும்ப வாரிசு ஆட்சியிலிருந்தால் பல வருடங்கள் கிடப்பில் போடப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்...
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
21-செப்-202121:36:12 IST Report Abuse
Davamani Arumuga Gounderஅட அபிஷ்டு தமிழ்ச்செல்வனே.. நீ ஒரு அசடாட்டம் பேசுகிறாயே.. சீனாவின் கப்பலை பறிமுதல் செய்து, சிறை பிடித்த பின்னர்தான் சீனா இந்திய வீரர்களை தாக்கியது என்பதை அறியமாட்டாயோ? தேசத்தின் பாதுகாப்பு விஷயங்களிலும் அரசியலை கலந்து பேசும் உன் போன்றோர்களை ஆயிரம் விவேகானந்தர்களின் போதனைகளளாலும், அறிவுரைகளாலும் கூட திருத்த இயலாது போல உள்ளதே இந்தியாவின் சுதந்திரத்துக்கு வெள்ளைக்காரனுடன் போரடிய ஈ.வெ.ரா. அவர்களின் போதனைகள் இதுதானோ?...
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
21-செப்-202121:46:27 IST Report Abuse
Davamani Arumuga Gounderஅசட்டு தமிழ்ச்செல்வனே - ttps://ta.wikipedia.org/s/2guy கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. போபால் பேரழிவு அல்லது போபால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிமக் கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும். யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போப்பால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட் என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் அண்டர்சன் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்தபின் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட வாரன் அண்டர்சன், அப்போதைய அரசியல் தலையீடுகளால் இந்தியாவை விட்டு கௌரவத்தோடு விமானத்தில் ஏற்றி அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.[1] பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுத்தார். அமெரிக்கக் குடிமகனான ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்து வந்தது.செப்டம்பர் 29, 2014 அன்று அமெரிக்காவில் இவர் இறந்தார்.[2] இந்நிகழ்வுக்குக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், போதுமான நட்ட ஈடு வழங்கக் கோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன...
Rate this:
Cancel
P SRIDHARAN - CHENNAI,இந்தியா
21-செப்-202111:21:44 IST Report Abuse
P SRIDHARAN இந்த விஷயத்தை உலக நாடுகள் கவுன்சில் அமைப்புக்கு தெரிவித்து இதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி சீனாவின் முகத்திரையை கிழிக்க வேண்டும் கயவர்கள் மாட்டிக்கொண்ட பின்பு தக்க தண்டனை கொடுக்க வேண்டும். என் வீட்டிலேயே எனக்கு உலை வைக்கும் பாக்கிஸ்தான் சீனா வர்த்தக பரிமாற்றங்களை உடனே தடை செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X