ரஷ்ய பார்லிமென்ட் தேர்தல்: அதிபர் விளாடிமிர் புடின் கட்சி வெற்றி

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மாஸ்கோ: ரஷ்ய பார்லிமென்ட் தேர்தலில், அதிபர் விளாடிமிர் புடினின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.ரஷ்ய பார்லிமென்ட்டில் இரு அவைகள் உள்ளன. கீழவையில் 450 இடங்களும், மேலவையில் 170 இடங்களும் உள்ளன. கீழவை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும், மேலவை உறுப்பினர்கள் மாகாணங்கள் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர். கீழவையில் மொத்தமுள்ள 450 இடங்களில், 225 இடங்களுக்கு நேரடி தேர்தல் மூலம்

மாஸ்கோ: ரஷ்ய பார்லிமென்ட் தேர்தலில், அதிபர் விளாடிமிர் புடினின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ரஷ்ய பார்லிமென்ட்டில் இரு அவைகள் உள்ளன. கீழவையில் 450 இடங்களும், மேலவையில் 170 இடங்களும் உள்ளன. கீழவை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும், மேலவை உறுப்பினர்கள் மாகாணங்கள் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர். கீழவையில் மொத்தமுள்ள 450 இடங்களில், 225 இடங்களுக்கு நேரடி தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 225 இடங்களுக்கு கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.



latest tamil news




முறைகேடு குற்றச்சாட்டு


ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (செப்., 20) எண்ணப்பட்டன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. இதற்கு அடுத்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.இந்நிலையில், நாடாளுமன்ற கீழவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதை ஆளும் கட்சி மறுத்துள்ளது.


latest tamil news




315 இடங்களுக்கு வாய்ப்பு!


நாடாளுமன்ற கீழவையில் அதிபர் புதினின் கட்சிக்கு தற்போது 334 உறுப்பினர்கள் உள்ளனர். இப்போதைய தேர்தல் மூலம் அந்த கட்சி 315 இடங்களை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 85 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவடையும்போது கட்சிகள் பெறும் இடங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம்.வரும் 2024-ம் ஆண்டில் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இதற்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இதில் அதிபர் புதின் முன்னிலை பெற்றதால் அதிபர் தேர்தலிலும் அவர் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக ரஷ்ய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202120:38:24 IST Report Abuse
அப்புசாமி நல்ல வேளை. அங்கே போய் அப்கே பார்... புட்டின் சர்க்கார்னு பேசலை. பேசியிருந்தா புட்டின் போய்ட்டிருப்பார்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
21-செப்-202115:48:22 IST Report Abuse
jayvee கம்யூனிஸ்டின் மரணம் ரஷ்யாவில் நிச்சயம்.. அடுத்தது சீனா ..அதற்கு முன் இந்தியா
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
21-செப்-202115:01:11 IST Report Abuse
Hari சமீப காலத்தில் சீனாவை ஆதரிப்பவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள் அது அமரிக்காவின் அதிபர் ஆனாலும் சரி அது அத்திபட்டி கோபாலபுரம் பஞ்சயாத்து உறுப்பினர் ஆனாலும் சரி ,என்னமோநடக்குது மர்மமாக இருக்குது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X