தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் தளர்வு: அமெரிக்கா அறிவிப்பு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: 'இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு, வரும் நவம்பர் மாதம் முதல், கெடுபிடிகளில் தளர்வு வழங்கப்படும்' என, அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று பரவத் துவங்கியதும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கெடுபிடிகளை அமெரிக்க அரசு விதித்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் கோவிட் நடவடிக்கைகள்

வாஷிங்டன்: 'இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு, வரும் நவம்பர் மாதம் முதல், கெடுபிடிகளில் தளர்வு வழங்கப்படும்' என, அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று பரவத் துவங்கியதும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கெடுபிடிகளை அமெரிக்க அரசு விதித்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் கோவிட் நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பாளர் ஜெப் ஜியன்ட்ஸ் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



வெளிநாட்டுப் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் போதும், வரும் நவம்பர் மாதம் முதல், அமெரிக்காவுக்குள் அதிக கெடுபிடிகள் இல்லாமல் வரலாம். ஆனால், அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், கோவிட் பரிசோதனை செய்து கொண்டு முடிவு நெகட்டிவ் என இருந்தால் தடையின்றி பயணிக்கலாம். விமானப் பயணத்திற்கு முன்னதாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



'வெளிநாட்டுப் பயணிகளின் தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை சேகரித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் 30 நாட்கள் வரை தங்கள் விமானத்தில் பயணித்த பயணிகளைக் கண்காணிக்க வேண்டும்' என, அமெரிக்காவின் தொற்று நோய்ப் பரவல் தடுப்பு மையம் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-செப்-202120:46:36 IST Report Abuse
DARMHAR எங்கள் பைடனை நன்றியுடன் பாராட்டியதற்கு மிகவும் மகிழ்ச்சி.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-செப்-202113:04:02 IST Report Abuse
Ramesh Sargam ஆஹா, மிக்க மகிழ்ச்சி. இந்த அறிவிப்புக்காக எவ்வளவு பேர் இத்தனை நாட்களாக காத்திருந்தனர். நன்றி பைடனுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X