பொது செய்தி

இந்தியா

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: துறவிக்கு அஞ்சலி செலுத்திய உ.பி., முதல்வர் பேட்டி

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
லக்னோ: அகில பாரதிய அகரா பரிஷத் (ஏபிஏபி) என்ற துறவியர் அமைப்பின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் சந்தேகமடைந்துள்ள போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். நரேந்திர கிரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ‛குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்,' எனக் கூறினார்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்
UP, Prayagraj, Yogi Adityanath, Last Respects, President, Akhil Bharatiya Akhada Parishad, APAP, Mahant Narendra Giri, Baghambari Math, உபி, துறவி, தற்கொலை, குற்றவாளிகள், தண்டிக்கப்படுவார்கள், முதல்வர், யோகி ஆதித்யநாத், அஞ்சலி

லக்னோ: அகில பாரதிய அகரா பரிஷத் (ஏபிஏபி) என்ற துறவியர் அமைப்பின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் சந்தேகமடைந்துள்ள போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். நரேந்திர கிரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ‛குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்,' எனக் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ளா பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகரா பரிஷத் (ஏபிஏபி) என்ற துறவியர் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவர் மகந்த் நரேந்திர கிரி, நேற்று (செப்.,20) மடத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வை உண்டாக்கியது. தற்கொலைக்கு முன்னதாக நரேந்திர கிரி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதில் சில சீடர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து மடத்தின் சீடர்களிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், துறவி மரணத்தில் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


latest tamil newsஇந்நிலையில், மகந்த் நரேந்திர கிரியின் உடலுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛இந்த சம்பவம் தொடர்பாக பல ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஏடிஜி, ஐஜி, டிஐஜி உள்ளிட்ட உயரதிகாரிகள் குழு இவ்வழக்கை விசாரிக்கிறது. பிரேத பரிசோதனை நாளை முடிவடையும். அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.' எனக் கூறினார்.


latest tamil news

ஈடு செய்ய முடியாத இழப்பு


முன்னதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தி: மகந்த் நரேந்திர கிரியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆன்மிக உலகுக்கும் பேரிழப்பு. மறைந்த நரேந்திர கிரியின் ஆன்மா ஸ்ரீராமரின் பொற்பாதங்களில் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய வழித் தொண்டர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் அருள பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-செப்-202122:38:21 IST Report Abuse
தமிழவேல் தன்னையே காப்பாத்திக்க முடியல, இதில் என்ன துறவி... ஆன்மிகம் ?
Rate this:
Cancel
21-செப்-202122:28:15 IST Report Abuse
அப்புசாமி யோகியாரே... நீர் தண்டிக்க முயன்றாலும் நமது உளுத்துப் போன சட்டங்கள், அதில் உள்ள ஓட்டைகள் வழியாக எல்லோரும் தப்பிச்சுடுவாங்க.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-செப்-202120:30:13 IST Report Abuse
முக்கண் மைந்தன் , இதுல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X