பொது செய்தி

இந்தியா

கேரளாவில் 90 சதவீதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி சாதனை: அமைச்சர் தகவல்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
திருவனந்தபுரம்: 'கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கோவிட் பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் கேரளாவில் கோவிட் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில்,

திருவனந்தபுரம்: 'கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.



latest tamil news



நாடு முழுவதும் கோவிட் பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் கேரளாவில் கோவிட் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில், கேரள சுகாதாத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளதாவது:கேரளத்தில் தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,67,008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதிதாக 15,692 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 92 பேர் பலியாகினர். மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,683 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



கேரளாவில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்தவகையில், கேரளாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி; ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டன. 100 சதவீத தடுப்பூசி இலக்கை கேரள அரசு விரைவில் எட்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
22-செப்-202100:27:19 IST Report Abuse
Aarkay அப்படியா? ஆனால், கோவிட மையமாக திகழ்வதின் மர்மம்?
Rate this:
Cancel
21-செப்-202120:36:14 IST Report Abuse
அப்புசாமி நீங்க என்ப செஞ்சாலும் மெடல் குத்திக்க முடியாது.
Rate this:
Cancel
21-செப்-202120:36:25 IST Report Abuse
அப்புசாமி நீங்க என்ன செஞ்சாலும் மெடல் குத்திக்க முடியாது. பெரீவருக்குத்தான் அதெல்லாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X