கனடாவில் 3வது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஒட்டாவா: கனடா பார்லிமென்டிற்கு நேற்று நடந்த தேர்தலில், ஆளும்கட்சியான லிபரல் கட்சி பெருவாரியான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 3வது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்க உள்ளார். ஆனால், ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.கடந்த 2019ம் நடந்த பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக
canada, justintrudeau, primeminister, pm,election, கனடா, ஜஸ்டின் ட்ரூடோ, தேர்தல், பிரதமர்

ஒட்டாவா: கனடா பார்லிமென்டிற்கு நேற்று நடந்த தேர்தலில், ஆளும்கட்சியான லிபரல் கட்சி பெருவாரியான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 3வது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்க உள்ளார். ஆனால், ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 2019ம் நடந்த பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், மீண்டும் தேர்தலை சந்திக்க ட்ரூடோ முடிவு செய்தார். இதனை தொடர்ந்து நேற்று 338 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. பெரும்பான்மை பெற 170 இடங்களில் வெற்றி பெறுவது முக்கியம்.


latest tamil news


தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில், குயிபெக் மாகாணத்தில் பாப்பிநாவ் தொகுதியில் போட்டியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்நாடு மற்றும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தல் முடிவுகளின் படி, தனிப்பெரும் கட்சியாக ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி உருவெடுத்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான 170 இடங்கள் கிடைப்பது சந்தேகம் என தெரிவித்து உள்ளன. அக்கட்சிக்கு 140 முதல் 150 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்து உள்ளன. பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 99 இடங்களிலும், குயிபெக்கோயிஸ் கட்சி 25 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:21:37 IST Report Abuse
jayvee அகில உலக தீவிரவாதிகள் அனைவரும் இவருக்கே வாக்களிப்பார்கள்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
21-செப்-202117:38:50 IST Report Abuse
பாமரன் வாழ்த்துக்கள்... (நீங்க இந்தியருக்கு பிடிச்சவர்ங்கறதால ஒரு ஸ்கூப் தர்றேன்... நாளைக்கு எங்க ஊர்ல இருந்து ஒருத்தர் புது பிளேன் எடுத்துக்கிட்டு அமேரிக்கா வர்றாப்ல... பக்கத்துலதான் இருக்கீங்கன்னு உங்க நாட்டுக்கு வந்து உங்களை கட்டிப்பிடிக்க முயற்சிகள் நடக்கலாம்.. அலவ் பண்ணுனீங்கன்னா நீங்க காலி... அவரு கட்டிபுடிச்ச எல்லாரும் பதவி போயி இப்போ வீட்ல இருக்காய்ங்க... நீங்க சின்ன வயசு பார்த்து சூதகமா இருந்துக்கோங்க...)
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
21-செப்-202117:01:21 IST Report Abuse
Ramanathan Muthiah வாழ்த்துக்கள் "கனடா பிரதமர் - திரு ஜஸ்டின் ட்ரூடோ" இதை தான் எதிர்பார்த்தோம், இனிமேல் கனடாவின் இம்மிகிரேஷன் வேலைகள் தொய்வில்லாமல் அணைத்து வயது உள்ள மக்கள் / படிப்பு அறிவு மிகுந்த மக்கள் உங்கள் நாட்டிற்கு வருவார்கள், அதற்கு முன் இந்திய கனடா நாட்டிற்கு தேவையான விமான போக்குவரத்தை அனுமதியுங்கள், உங்கள் நாட்டுடன் "சென்னை மற்றும் திருச்சியையும் இணைந்து" விமான சேவை ஆரம்பிக்க உதவுங்கள் ...வரவேற்க சில சாதகமான மாறுதல்களை மாற்றி..அறிவுள்ளவர்களுக்கும் - முக்கியமாக "இட ஒதுக்கீடு இல்லாமல், ஜாதி மதம் பார்க்காமல்" அறிவுசார் மக்களுக்கு உங்கள் நாட்டில் வேலை மற்றும் தொழில் தொடங்க ..உங்கள் கதவுகள் திறந்து "இந்திய - கனடா" உறவுகளை மேம்படுத்துங்கள் நன்றி ஓம் சாய் ராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X