ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பு: குஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
ஆமதாபாத்: ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட, ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 டன் ஹெராயின் குஜராத்தில் பிடிபட்டு உள்ளது.இதுகுறித்து வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்து உள்ளதாவது: முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கனில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதைப் பொருட்கள் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் இருவர்

ஆமதாபாத்: ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட, ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 டன் ஹெராயின் குஜராத்தில் பிடிபட்டு உள்ளது.



latest tamil news



இதுகுறித்து வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்து உள்ளதாவது: முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கனில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதைப் பொருட்கள் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இரு கன்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இரு கன்டெய்னர்களும் ஆப்கனில் இருந்து ஏற்றப்பட்டு உள்ளன.


latest tamil news



இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டில்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த இரு கன்டெய்னர்களிலும் உள்ள ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.19,900 கோடி. இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
உலக அளவில் 80 முதல் 90 சதவீதம் அளவிற்கு ஹெராயின் உற்பத்தி செய்யும் நாடு ஆப்கானிஸ்தான். அந்நாடு சமீபத்தில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தபின், ஹெராயின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
21-செப்-202121:56:21 IST Report Abuse
Vittalanand இNத பொருளின் விலை தமிழ் நாட்டு பணப்பற்றாகுறையை தீர்க்கும் போல உள்ளதே . ஸ்டாலினிடம் ஒப்படைக்கலாம்.
Rate this:
Cancel
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
21-செப்-202118:22:16 IST Report Abuse
Ram Mayilai இதைத்தான் தாலிபான்கள் அவர்களின் ஷி சட்டம் என்கிறார்களோ? உலகத்துக்கே ஹெராயின் உற்பத்தி மையம்.
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
21-செப்-202117:40:28 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் அய்யய்யோ.... குஜராத் “ரோல் மாடல் ஸ்டேட் ஃபார் வோர்டு”.... அப்படீன்னு சொன்ன சங்கி, அல்லக்கைகளே, அணி திரண்டு... இந்த செய்தி பதிவிட்ட பக்கம் வந்து போகவும்... நேராக வரவும்...?
Rate this:
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
21-செப்-202121:49:52 IST Report Abuse
ஏகன் ஆதன் செய்தியை புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட மொழி அறிவு வரவில்லை . சென்று இன்பநிதிக்கு எப்படி சோப்பு போட்டு முன்னேறலாம் என்று உங்கள் முன்னேற்ற வழியை பாருங்கள்...
Rate this:
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
21-செப்-202121:53:51 IST Report Abuse
ஏகன் ஆதன் குடும்ப கொத்தடிமைகளே குஜராத் என்பதால் பிடிபட்டு உள்ளது , தமிழ்நாட்டில் பிடிபடாமல் கடத்தி விட்டனர் என்று இன்னொரு அர்த்தமும் வருகிறதே , களிமண்ணில் நியூரான் கனெக்சன் கிடைத்தால் புரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X