பெங்களூரு : ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு வழங்கிய ராஜஸ்தானை சேர்ந்தவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
நம் நாட்டின் ராணுவ ரகசியங்கள் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு ரகசியமாக வழங்கப்படுவதாக ராணுவ உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் ராஜஸ்தான் பார்மர் பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் 35 என்பவரை பெங்களூரில் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எடுத்த ராணுவ இடங்கள் தொடர்பான புகைப்படங்கள் பாதுகாப்பு நிறுவனங்களின் விபரங்களை 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார்.
இதற்காக இரண்டு மாதங்களுக்கு முன் பெங்களூரு வந்து ராணுவ முகாம்களை நோட்டம் விட்டுள்ளார். போலீசார் தன்னை கண்காணிப்பதை அறிந்து பரிமாறிய சில தகவல்களை அவர் இணையதளத்திலிருந்து அழித்துள்ளார். அதையும் போலீசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE