பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ‛‛வேலுார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:இன்று (செப்.,21): வேலுார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா
வேலுார், திருவள்ளூர், சேலம், இடி மின்னலுடன், கனமழை, தமிழக வானிலை, ஆய்வு மையம், தகவல்

சென்னை: ‛‛வேலுார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இன்று (செப்.,21): வேலுார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 22ம் தேதி: திருவள்ளூர், வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப்., 23ம் தேதி: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப்.24ம் தேதி: கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news



செப்.,25ம் தேதி: கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பகலில் தெளிவாகக் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்):


மணம்பூண்டி (விழுப்புரம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 16 செ.மீ., திருக்கோவிலுார் (கள்ளக்குறிச்சி) 11 செ.மீ., கீழ்பென்னாத்துார் (திருவண்ணாமலை) 10 செ.மீ., மயிலாடுதுறை, குறிஞ்சிப்பாடி (கடலுார்), ஆலங்காயம் (திருப்பத்துார்) தலா 9 செ.மீ., போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), சூரப்பட்டு (விழுப்புரம்) தலா 7 செ.மீ., சாத்துார் (விருதுநகர்), புவனகிரி (கடலுார்) தலா 6 செ.மீ., ராதாபுரம் (திருநெல்வேலி), காஞ்சிபுரம், மேலாளத்துார் (வேலுார்) தலா 5 செ.மீ., மேட்டுப்பாளையம் (கோவை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), முகையூர் (விழுப்புரம்) தலா 4 செ.மீ.,


மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை


இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SELF -  ( Posted via: Dinamalar Android App )
21-செப்-202115:30:24 IST Report Abuse
SELF எத்தனை மணிக்கு பெய்யம் எவ்வளவு நேரம் கொட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X