வேலையில்லாதவர்களுக்கு நிதியுதவி: கோவாவில் கெஜ்ரிவால் வாக்குறுதி

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
பனாஜி: கோவாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக கோவாவில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தெரிந்திருந்தால் மட்டுமே அரசு வேலை கிடைப்பதாக இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். லஞ்சம், பரிந்துரை
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

பனாஜி: கோவாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக கோவாவில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தெரிந்திருந்தால் மட்டுமே அரசு வேலை கிடைப்பதாக இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். லஞ்சம், பரிந்துரை இல்லாமல் அரசு வேலை கிடைப்பதில்லை எனவும் கூறுகின்றனர். இதற்கு நாங்கள் முடிவு கட்டுவோம். கோவா இளைஞர்களுக்கு, அவர்களது உரிமையை பெற உரிமை உள்ளது.


latest tamil news


கோவாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் படித்த இளைஞர்களில் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்வோம். வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அரசு பணிகளில் 80 சதவீதம் கோவா இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக சட்டம் இயற்றப்படும்.

கொரோனா காரணமாக, சுற்றுலாதுறை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை நம்பியுள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்கும் வரை, அக்குடும்பங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்குவோம். அதேபோல், சுரங்கங்களும் மூடப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்திற்கும் மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

கோவாவில், இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதை குறைக்கும் வகையில், பிளஸ் 2 முடித்தவர்கள் தங்களது திறமையை வளர்த்து கொள்வதற்காக ' திறன் பல்கலை' அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:22:24 IST Report Abuse
jayvee இப்படித்தான் பப்பு சொன்னார்..
Rate this:
Cancel
22-செப்-202109:12:41 IST Report Abuse
பேசும் தமிழன் ஏன் மிஸ்டர் கெஜரிவால்..... டில்லியில் இப்போது உங்கள் ஆட்சி தானே.... அங்கு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு அந்த பணத்தை... இப்போதே கொடுக்க வேண்டியது தானே.... உங்களை யார் தடுத்தது
Rate this:
Cancel
22-செப்-202106:45:01 IST Report Abuse
அப்புசாமி இன்னொரு ஏழைப்பங்காளர் கேசரிவாள்... வாழ்க.. வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X