பொது செய்தி

இந்தியா

செல்லப்பிராணியுடன் விமான பயணம்; ரூ.2 லட்சம் செலவு செய்த பெண்

Added : செப் 21, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
மும்பை: மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் ஒருவர் தன் செல்லப்பிராணியுடன் பயணிக்க அனைத்து பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்களையும் வாங்கி பயணித்துள்ளார். இதற்காக அவர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளார்.இன்றைய காலக்கட்டத்தில் பலரும் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். செல்லப்பிராணிகள் மீது அவர்கள் செலுத்தும் அன்பு
Woman, Books, Entire Business Class, Air India, Travel, Pet Dog, விமான பயணம், பெண், செல்லப்பிராணி, ஏர் இந்தியா, பிஸ்னஸ் கிளாஸ்,

மும்பை: மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் ஒருவர் தன் செல்லப்பிராணியுடன் பயணிக்க அனைத்து பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்களையும் வாங்கி பயணித்துள்ளார். இதற்காக அவர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். செல்லப்பிராணிகள் மீது அவர்கள் செலுத்தும் அன்பு மாறுபட்டாலும், ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கிறது. அந்த வகையில் பெண் ஒருவர், தனது செல்லப்பிராணிக்காக விமானத்தில் பிஸ்னஸ் கிளாஸ் எனப்படும் வணிக வகுப்பு இருக்கைகள் அனைத்தையும் ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்து முன்பதிவு செய்துள்ள சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகவே விமானங்களில் செல்லப்பிராணிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சில விதிமுறைகளுடன், செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு வர ஏர் இந்தியா அனுமதி வழங்குகிறது.


latest tamil news



மேலும், ஒரு விமானத்தில் 10 முதல் 12 பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகள் இருக்கும் எனவும், இதன் கட்டணமாக ரூ.20 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மும்பையில் இருந்து சென்னை கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர், தன் செல்லப்பிராணிக்காக அதிலிருந்த 12 பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்கான டிக்கெட்களையும் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். இதற்காக அவர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளார். செல்லப்பிராணி மீதான இப்பெண்ணின் அன்பு பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Coimbatore ,இந்தியா
21-செப்-202121:44:04 IST Report Abuse
Krishnan சிம்பிளாக சொன்னால் பண திமிரு தான்.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
21-செப்-202118:44:44 IST Report Abuse
S Bala இதுமாதிரி திமிர் பிடித்தவர்களின் வருமான வரி கணக்கை தணிக்கை செய்ய வேண்டும்
Rate this:
Cancel
21-செப்-202116:25:57 IST Report Abuse
Rajesh Kumar 0...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X