பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் 54,045 பேர் மனு

Added : செப் 21, 2021
Share
Advertisement
சென்னை : ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, இதுவரை 54 ஆயிரத்து 45 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9ம் தேதிகளில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் 15ம் தேதி துவங்கியது. இம்மாதம் 18ம் தேதி வரை 20 ஆயிரத்து 74 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.கடந்த

சென்னை : ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, இதுவரை 54 ஆயிரத்து 45 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9ம் தேதிகளில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் 15ம் தேதி துவங்கியது. இம்மாதம் 18ம் தேதி வரை 20 ஆயிரத்து 74 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.கடந்த 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை. அன்றைய தினம் மனுத்தாக்கல் நடக்கவில்லை.

ஒரு நாள் விடுமுறைக்கு பின், நேற்று மீண்டும் மனுத்தாக்கல் நடந்தது.பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் மனுத்தாக்கல் செய்தனர். இதனால், தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு வெளியே, ஆதரவாளர்கள், அரசியல் கட்சியினர் கூட்டம் களை கட்டியது. நேற்று ஒரே நாளில், 33 ஆயிரத்து 971 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 54 ஆயிரத்து 45 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.அதிகபட்சமாக, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41 ஆயிரத்து 27 பேர்; ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரத்து 107 பேர்; ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2,683 பேர்; மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 223 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மனுத்தாக்கல் நாளை முடிகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், இன்றும் மனுதாக்கல் விறுவிறுப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X