தடுப்பூசி ஏற்றுமதி: மத்திய அரசு முடிவுக்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி ஏற்றுமதி: மத்திய அரசு முடிவுக்கு வரவேற்பு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதமுள்ள கொரோனா தடுப்பூசியை அடுத்த மாதம் முதல் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக வெளியான தகவலுக்கு, காவி(Gavi) அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில், கோவீஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் ஷீரம் நிறுவனம், உபரியாக
தடுப்பூசி ஏற்றுமதி: மத்திய அரசு முடிவுக்கு வரவேற்பு

புதுடில்லி: இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதமுள்ள கொரோனா தடுப்பூசியை அடுத்த மாதம் முதல் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக வெளியான தகவலுக்கு, காவி(Gavi) அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கோவீஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் ஷீரம் நிறுவனம், உபரியாக இருக்கும் மருந்துகளை பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 2வது அலையின் தாக்கம் அதிகரித்ததாலும், இந்தியாவிற்கு தடுப்பூசி கணிசமாக தேவைப்படும் என்பதாலும், தடுப்பூசி ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தியது போக, மீதம் இருக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் பங்கேற்கும் குவாட் மாநாட்டில், தடுப்பூசி விநியோகம் தொடர்பாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, தடுப்பூசி ஏற்றுமதியை துவங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.


latest tamil news



இந்நிலையில், தடுப்பூசி விநியோகம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக காவி அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதியை துவங்க இந்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக வெளியான தகவலை வரவேற்கிறோம். இது உலகளவிலும், உள்நாட்டிலும் சுகாதார பாதுகாப்பில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படும் நபர்களை பாதுகாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ள, எங்களது அட்டவணையில் ஏற்படும் தாக்கத்தை தெரிந்து கொள்வதற்காக, இந்திய அரசும் மற்றும் சீரம் நிறுவனத்துடனும் முதலில் பேச நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X