தமிழில் அர்ச்சனை திட்டம்; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
புதுடில்லி: கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநிலம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை
தமிழில் அர்ச்சனை, உச்சநீதிமன்றம், தமிழக அரசு, கேவியட் மனு, தாக்கல்

புதுடில்லி: கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநிலம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


latest tamil news


இந்த நிலையில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் விவகாரங்கள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், ‛‛தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவது தொடர்பான விவகாரத்தில், தங்களது தரப்பு (அரசு தரப்பு) விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
22-செப்-202108:21:36 IST Report Abuse
krish இன்னும் என்ன விளக்கம் தேவை. வெளிவந்த உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கள், ஆலய உள் விவகார ஆகம, ஆன்மிக விஷயங்களில் அரசு தலையிடுவதை கண்டித்து தடை விதித்த உத்திரவுகள் இவர்கள் சுயநல அரசியலுக்கு தடை கற்கள் என நன்கு உணர்ந்து மீண்டும் தர்க்கத்தை நீடித்து, தடை உத்தரவுகளை நீர்க்க செய்து, கோயில் நடைமுறைகளை தங்கள் அதிகார ஆளுமைக்குள் கொண்டு வந்து , கோயில் சொத்துக்களையும், வருமானத்தையும் அபகரிக்க முயல்கிறார்கள். இறைவன் அனுமதிக்கமாட்டான். உச்சநீதிமன்றம் உச்சந்தலையில் உரைக்கும் வகையில் குட்டுவார்கள். தர்மம் வெல்லும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-செப்-202102:29:23 IST Report Abuse
மலரின் மகள் மத சம்பந்த பட்ட விஷயங்களில் அரசும் நீதி மன்றமும் தலையிட கூடாது. தேவையில்லாமல் இவர்கள் இதில் அக்கினி பரீட்சை நடத்துகிறார்கள். பல சமூகத்தினரின் கோயில்களில் பலிகொடுப்பதை அம்மாவின் ஆட்சியில் திடுமென்று தடை விதித்தார். எத்துணையோ பேருக்கு நேர்த்தி கடைமைகள் இருந்தன அவற்றை செயல்படுத்த முடியாமல் தெய்வ குற்றம் வந்து விடும் என்று வேதனை அடைந்தவர்கள் பலர். அவர்களின் எண்ணம் தேர்தலில் வெளிப்பட்டது. அம்மா ஆட்சி காணாமல் போயிற்று, அதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இவர்கள் கொஞ்சம் பாதுகாப்பாக தலையிடுவதாக நினைத்து கொண்டு மிகவும் சிந்தித்து இந்து மதத்தின் நம்பிக்கையில் மற்றும் தலை இடுகிறார்கள். வாக்காளர்கள் பார்த்து கொண்டே இருக்கிறார்கள். திடிரென்று ஒரு பொறி தென்படும்போது மொத்தமாக காணாமல் போய்விடும் அவர்களின் ஆட்சி காட்டில் என்பதை மனதில் இருத்தி கொள்ளவேண்டும். மமதை கூடாது.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-செப்-202122:24:54 IST Report Abuse
Saravanan தமிழில் அர்ச்சனை செய்ய சொல்லி யாரவது போராட்டம் நடத்தினார்களா? நாத்திக கொள்கை கொண்ட திராவிட திருடர்களுக்கு கோவிலில் என்ன வேலை மக்கள் போராட்டம் நடத்திடுவது டாஸ்மாக் கடைகளை மூட சொல்லித்தான் அதனை ஏற்க துப்பில்லாத சுடலை தேவை இல்லாமல் எங்கள் உணர்வுகளில் தலையிடுவது ஏன்? ஹிந்துக்களின் ஒற்றுமையே இந்த திருடர்களின் கொட்டத்தை அடக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X