பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பயிற்றுனர்கள் மாறுதல் முன்னுரிமை பட்டியலில் குழப்பம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
மதுரை : கல்வித்துறையில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியலில் நிலவும் குழப்பத்தால் கலந்தாய்வு தள்ளிவைக்கப் பட்டுள்ளது. இதில் சீனியர் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஜூனியர் நிலைக்கு தள்ளப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் 2006 முதல் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர்.



மதுரை : கல்வித்துறையில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியலில் நிலவும் குழப்பத்தால் கலந்தாய்வு தள்ளிவைக்கப் பட்டுள்ளது. இதில் சீனியர் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஜூனியர் நிலைக்கு தள்ளப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் 2006 முதல் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 2014 முதல் மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்ததால் கலந்தாய்வு நடந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அவமதிப்பு வழக்குதொடரப்பட்ட நிலையில் அவசர நிலையில் மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு செப்.20ல் மாறுதல் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனியர் ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறியதாவது:
2014ல் பணி நிரவல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை வரவேற்கிறோம். அதற்காக ஒட்டுமொத்த சீனியர்களும் பாதிக்கும் வகையில் முன்னுரிமை பட்டியலை அதிகாரிகள் தயாரித்துள்ளனர். வழக்குகள் தொடர்ந்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் இது உள்ளது.மாநில சீனியாரிட்டி என்ற பெயரில் ஆசிரியர் பயிற்றுனர்களின் 'ரேங்க்' சீனியாரிட்டி வயது சீனியாரிட்டி மறுக்கப்பட்டுள்ளன.

'ஸ்பவுஸ்' சீனியாரிட்டியில் ஜூனியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.இதனால் 2014ல் நடந்த பணிநிரவலில் பாதிக்கப்பட்ட 368 பேரை விட தற்போது 2838 சீனியர்கள் (6 மடங்கு) ஜூனியர் நிலைக்கு தள்ளப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் இப்பிரச்னையை கொண்டு சென்றுள்ளோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X