பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்த முறையை ஒழிக்கணும்: தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில், தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேஷன் ஓல்டு ஊட்டி, மற்றும் பிங்கர் போஸ்ட் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தமிழக விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் கூறுகையில்," பொறுப்பேற்ற 6 மாதங்களில் தமிழகம்
ஒப்பந்த முறையை ஒழிக்கணும்:  தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில், தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேஷன் ஓல்டு ஊட்டி, மற்றும் பிங்கர் போஸ்ட் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தமிழக விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் கூறுகையில்," பொறுப்பேற்ற 6 மாதங்களில் தமிழகம் உட்பட ஏழு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அதில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்குகின்றனர்; தூய்மை பணி மேற்கொள்ள போதிய உபகரணங்கள் தருவதில்லை; பி.எப்., இ.எஸ்.ஐ., யில் குளறுபடி உள்ளிட்ட அடுக்கடுக்கான குறைகளை தான் தெரிவிக்கின்றனர்.

ஊட்டி நகராட்சியில் மேற்கொண்ட ஆய்வில் சுகாதார பணியில் திருப்தி இல்லை. மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் இருக்கும் என்று தெரிகிறது. தூய்மை பணியாளர்களும் குறைகளை தெரிவிக்க பயப்படுகின்றனர். தூய்மை பணியாளர்கள் மூலம் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் லாபம் அடைந்ததைதான் பார்க்க முடிகிறது. அதனால், சுகாதார பணி மேம்பட அந்தந்த மாநிலங்களில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த உள்ளாட்சியில் உள்ள ஒப்பந்ததாரர் அல்லது பொதுநல அமைப்புகள் மூலம் எல்.ஐ.சி., பாலிசி திட்டத்தில் அவர்களுக்கு பணம் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளேன். இவ்வாறு, வெங்கடேசன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X