பொது செய்தி

இந்தியா

'லே' பகுதியில் விமான நிலையம்; 2022 டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் சிந்தியா உறுதி

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரின் லே பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையம், 2022 டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதியளித்து உள்ளார்.விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஜம்மு - காஷ்மீரின் லே பகுதியில் நடைபெறும் விமான நிலையக் கட்டுமானப் பணிகள் குறித்து, லடாக் கவர்னருடன் காணொலி

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரின் லே பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையம், 2022 டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதியளித்து உள்ளார்.



latest tamil news



விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஜம்மு - காஷ்மீரின் லே பகுதியில் நடைபெறும் விமான நிலையக் கட்டுமானப் பணிகள் குறித்து, லடாக் கவர்னருடன் காணொலி வாயிலாக விவாதித்தார். அப்போது அமைச்சர் சிந்தியா தெரிவித்ததாவது:


latest tamil news



கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தில், கூடுதல் ஓடுதளங்கள் அமைப்பதற்காக தொழில்நுட்பக் குழுவினருடன் விரைவில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இந்த விமான நிலையம் வரும் 2022ம் ஆண்டு டிச., இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.


latest tamil news



விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களுடன் சிறு விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X