ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் உதம்பூர் பகுதியில் இன்று (செப்.,21) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டம் ஷிவ்கர்தர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால்
ஜம்முகாஷ்மீர், ராணுவ_ஹெலிகாப்டர், விபத்து, விமானிகள், இருவர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் உதம்பூர் பகுதியில் இன்று (செப்.,21) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டம் ஷிவ்கர்தர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்துள்ளனர்.


latest tamil news



ஆனால், மலைப் பகுதியில் தரையிறக்கியதால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த ரோஹித்குமார் மற்றும் அனூஜ் ராஜ்புத் ஆகிய 2 விமானிகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.
காஷ்மீரில் மோசமான வானிலை மற்றும் பனி மூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X