பொது செய்தி

இந்தியா

பாரபட்சம் கொண்ட பிரிட்டன் தடுப்பூசி கொள்கை: வெளியுறவு செயலர்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: பிரிட்டன் அரசு வெளியிட்ட தடுப்பூசி கொள்கை பாரபட்சம் கொண்டது என, மத்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தன் சிறிங்களா தெரிவித்து உள்ளார்.பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில், அடுத்த மாதம் 4ம் தேதி முதல், அனைத்து நாடுகளும் சிவப்பு பட்டியலில் வைக்கப்படும். இரண்டு டோஸ் 'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்ட இந்தியர்கள், பிரிட்டன் பயணிக்கும்போது, அவர்கள் தடுப்பூசி
பாரபட்சம் கொண்ட பிரிட்டன் தடுப்பூசி கொள்கை: வெளியுறவு செயலர்

புதுடில்லி: பிரிட்டன் அரசு வெளியிட்ட தடுப்பூசி கொள்கை பாரபட்சம் கொண்டது என, மத்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தன் சிறிங்களா தெரிவித்து உள்ளார்.

பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில், அடுத்த மாதம் 4ம் தேதி முதல், அனைத்து நாடுகளும் சிவப்பு பட்டியலில் வைக்கப்படும். இரண்டு டோஸ் 'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்ட இந்தியர்கள், பிரிட்டன் பயணிக்கும்போது, அவர்கள் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்படுவர். அவர்கள் பிரிட்டன் புறப்படுவதற்கு முன், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பிரிட்டன் சென்று சேர்ந்த இரண்டாவது மற்றும் எட்டாவது நாட்களில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.


latest tamil news


இது தொடர்பாக வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தன் சிறிங்களாகூறியதாவது: கோவிஷீல்டு தடு்ப்பூசியை அங்கீகாரம் அளிக்காதது பாரபட்சம் கொண்ட கொள்கை. இது பிரிட்டன் செல்லும் நமது குடிமக்களை பாதிக்கும். இது குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சரிடம், கடுமையாக நமது வெளியுறவு அமைச்சர் எழுப்பி உள்ளார். இந்த விவகாரம் சுமூகமாக தீர்க்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டதாக என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
21-செப்-202122:45:09 IST Report Abuse
அன்பு இந்தியாவில் வேலை செய்ய அமெரிக்கர்கள் கூட, கியூவில் நிப்பாங்க என்று சொன்னாங்க. ஆனா நிலைமை இப்படி மோசமா இருக்கு.
Rate this:
Cancel
Bairav Kumar - Chennai,இந்தியா
21-செப்-202119:50:18 IST Report Abuse
Bairav Kumar பிரிட்டன் செய்யறத்தெல்லாம் ஒண்ணுமே இல்லே. சிங்கப்பூர் செய்ற அக்கிராமத்த இந்த அதிகாரி பேச மாட்டேன்கிறார். இந்தியாவிலிருந்து வேலைக்காக சிங்கப்பூர் சென்ற நாலு லட்சம் தமிழர்கள் நிலைமை மிகவும் படு மோசமாக உள்ளது. சிங்கப்பூர் அரசு போட்ட பைசர் இரண்டு தடுப்பு ஊசியையும் அணைத்து இந்திய குடிமக்களும் போட்டு கொண்டுள்ளனர். ஆனால் ஊருக்கு வர அனுமதியில்லை. சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தர வாசிகளும் போய் வரலாம், ஆனால் ஒரு நபருக்கு 4000 சிங்கப்பூர் டாலர் செலவு ஆகும். விமான செலவு $1300 , கோவிட் பரிசோதனை கட்டணம் மூன்றுமுறை $450 , ஊருக்கு வந்து சிங்கப்பூர் திரும்பியவுடன் சிங்கப்பூர் அரசு நிர்ணயித்துள்ள ஹோட்டலில் நமது சொந்த செலவில் பதினைந்து நாள் தனிமை படுத்தி கொள்ளவேண்டும், ஹோட்டல், சாப்பாடுதங்கும் செலவு $2300 , இப்படி இந்தியர்களிடம் மட்டும் காசை பிடுங்குகின்றனர். பணக்கார மற்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தனிமை படுத்த்தல் கிடையாது. சில நாடுகளுக்களில் இருந்து வருபவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று ஒரு வாரம் தனிமை படுத்தி கொள்ள வேண்டும். இந்தியர்களுக்கு மட்டுமே பாராபட்சம். சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்க பட்டுள்ளதால் ஹோட்டல் பிசினஸ் படு பாதாளத்தில் போய் விட்டது. அதை ஈடுகட்ட இந்தியா போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டு வரும் இந்தியர்களுக்கு மனிதாபிமானம் இல்லாமல் காசு பார்க்கிறது சிங்கப்பூர். என்னுடைய மகன் சமீபத்தில் கடும் நெருக்கடிக்கு இடையில் முக்கியமான வேலை காரணமாக $4000 டாலர் செலவு செய்து பதினைந்து நாள் வந்து சென்றார். இதை எந்த அதிகாரியும் கண்டிக்க வில்லையே, இரண்டு தடுப்பூசிபோட்ட இந்தியர்கள் ஊருக்கு சென்றுவந்தால் அவரவர் வீடுகளில் பத்துநாள் தனிமை படுத்தி கொள்ளவேண்டும் என சிங்கப்பூர் அரசு சட்டம் போடலாம். வீட்டில் தங்கு பவர்களுக்கு தனிமை படுத்துதலை கண்காணிப்பதற்க்காக சாங்கி விமான நிலையத்தில் $100 தனியாகவாங்கிக்கொண்டு கையில் GPS வாட்ச் கருவியும், கேமரா ஒன்றும் அளித்துவிடுவார்கள். உங்க ரூமை விட்டு வெளியே வந்தால் அரசுக்கு தெரிந்துவிடும், அப்புறம் $5000 பைன் கட்டவேண்டும், இது ஓகே. ஏன் நம்முடைய தமிழர்களுக்கு விடியல் தரும் முதல்வர் ஸ்டாலின் கூட தமிழர் படும் வேதனை புரிந்து கொண்டு சிங்கப்பூர் அரசுக்கு வேண்டுகோள் விடுக்காமல் இருக்கிறார். வாழக பாரதம்
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
21-செப்-202120:55:31 IST Report Abuse
Anvardeenமிக சரியாக சொன்னீர்கள் .. இரண்டு வருடம் இங்க நன்றாக வாழ்க்கை...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-செப்-202119:48:11 IST Report Abuse
Ramesh Sargam UK Health secretary / health minister is Sajid Javid who is of Pakistan origin, and who might be behind this ban. India need to raise a strong objection to his policy banning Indian travelers who had taken Indian made vaccines - Covaxin and Covishield.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X