பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: பறக்கும் படை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு,
உள்ளாட்சி தேர்தல், பறக்கும்படை, தேர்தல் ஆணையம், உத்தரவு

சென்னை: திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், செப்டம்பர் 15ம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


latest tamil news


இதையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டது. அதன்படி அக்டோர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், வேட்பாளர்களை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதில், ஒரு செயற் குற்றவியல் நீதிபதி மற்றும் 2 அல்லது 3 போலீசார் கொண்ட பறக்கும் படை அமைக்க வேண்டும். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுப்பிற்கும் ஒரு பறக்கும் படை இடம் பெற வேண்டும். உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். பறக்கும் படைகளின் ஆய்வு, பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
21-செப்-202122:42:15 IST Report Abuse
Easwar Kamal உள்ளாட்சி தேர்தல் பிஜேபி ரொம்ப முக்கியம். யார் கண்டா ரெட்டைகுழல் துப்பாக்கிகள் நாட்டில் உள்ள எல்லா ப்ரிச்சனியும் விட்டுபுட்டு தமிழ்நாட்டில் வந்து டேரா போடலாம். மக்களே உஷார்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
21-செப்-202118:37:43 IST Report Abuse
Narayanan தேர்தல் ஆணையத்தை கண்காணிக்கவே ஒரு பறக்கும் படை வேண்டுமே
Rate this:
Cancel
Mohan - Salem,இந்தியா
21-செப்-202118:07:33 IST Report Abuse
Mohan மக்களே தேர்தல் வரும் சமயங்களில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் இந்த பறக்கும் படை சோதனைகளால் மக்களுக்கோ அல்லது தேர்தல் நிலைக்கோ ஏதாவது பயன் இருக்கிறதா எனக் கேட்டுப் பார்த்தால், மிக நிச்சயமாக.. ஒரு பலனும் இருக்கிற மாதிரி தெரியல... மாறாக பொதுமக்களை எரிச்சல் அடைய வைத்து நொந்து போக வைக்கும் வேலையாக தெரிகிறது. இந்த அலுவலர்களிடம் பிடிபடும் பணம் அரசியலவாதிகளின் சொந்த பணம் அல்ல.கட்சி பணமும் அல்ல...பொது ஜனங்கள். மற்றும் சின்ன வியாபாரிகளின் உழைப்பால் வந்த பணம். மு..ஸ் அ...னி போன்றவர்கள் கருப்பு பணத்தை நாலுநாடுகளைச்சுற்றியடித்து ரிஷிமூலம் தெரியாத மாதிரி நம் நாட்டுக்குள், கணக்குகாட்டாமல் வர வைத்து டபாய்த்துக் கொண்டால் அவர்கள் மீது நக நுனி கூட படாமல் பாதுகாக்கும் அரசாங்கஙகள், இது மாதிரி சிறு வியாபாரிகளை கொட்டை கசக்குவது யாருடைய புத்தியிலே உதித்த ஐடியாவோ ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்னைக்குமே அது சரி. பணத்துக்கு என்ன ஐயா ஆவணம் வேணும்னு சொல்றீங்க? அப்ப பொது மக்கள் கையில் இருக்கற பணம் எல்லாம் கருப்பா? வியாபார முதல் என்பதெல்லாம் புரியாத புதிரா உங்களுக்கு?? அரசாங்க பணத்துல காருல போயிக்கிட்டு அரசாங்க பணத்துல சோறு சாப்பிட்டுகிட்டு அதிகாரத்துவ இருக்கிறவங்க , அரசியல்வாதி உண்மையிலே பணத்தை பட்டுவாடா செய்வதை என்னிக்கு பிடித்திருக்கிறார்கள்??? ஹூம். AN EXERCISE IN FUTILITY.??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X