சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கில் தினேஷின் அம்மா, சகோதரியிடம் விசாரணை: நான்கு பேருக்கு சம்மன்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டி: கோடநாடு எஸ்டேட்டில், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ், அவரது தாயார், சகோதரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று இரவு அவரது தந்தையிடம் விசாரணை நடந்தது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். தொடர்ந்து, அங்கு
கோடநாடு, வழக்கு, தினேஷ், அம்மா, சகோதரி, விசாரணை, சம்மன்

ஊட்டி: கோடநாடு எஸ்டேட்டில், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ், அவரது தாயார், சகோதரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று இரவு அவரது தந்தையிடம் விசாரணை நடந்தது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். தொடர்ந்து, அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ், ஜூலை 5ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில், ஆக.,13ம் தேதி கோர்ட்டில் ஆஜரான குற்றச்சாட்டப்பட்ட முக்கிய நபரான சயான், போலீசாரிடம் அளித்துள்ள மனுவால், ஆக.,17ம் தேதி ஐந்து மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வீடியோவில் பதிவு செய்தனர். சயான் வாக்குமூலத்திற்கு பின், கோடநாடு வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இவ்வழக்கில் கூடுதல் விசாரணைக்கு ஐகோர்ட் அனுமதி அளித்ததால், நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணைக்கும் தேவைப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், கோத்தகிரி சோலூர் மட்டம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை வழக்கில் சில தகவல் கிடைத்திருப்பதால், வழக்கை மறு விசாரணை செய்வதற்கு அனுமதி கேட்டு, கோத்தகிரி தாசில்தார் சீனிவாசனிடம் நேற்று மனு அளித்துள்ளார். அன்று, இரவு, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணிவரை 2 மணிநேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நான்கு மணிநேரம் தினேஷ் வசிக்கும் கெங்கரை கிராமத்தில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தினேஷின் அம்மா கன்னிகா, சகோதரி ராதிகாவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் வேகம்!


கோடநாடு வழக்கில் கூடுதல் தகவல் பெற, ஊட்டி செஷன்ஸ் கோர்ட் தனிப்படை போலீசாரின் மனுவுக்கு அனுமதியளித்ததால், சம்மன் அனுப்பி பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அறிக்கையை வரும் அக்., 2ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்று கோர்ட்டில் தாக்கல் செய்ய இருப்பதால் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.


நான்கு பேருக்கு சம்மன்!


இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமினில் உள்ள நான்கு பேருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி ஆகியோரிடம் நாளை (22ம் தேதி) விசாரணை நடத்துகின்றனர். தொடர்ந்து, 24 ம் தேதி தீபு, ஜித்தின் ஜாயிடம் விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subash - Chennai,இந்தியா
21-செப்-202118:52:16 IST Report Abuse
Subash எல்லா உண்மைகளும் வெளியில் வரும் நேரம் நெருங்குகிறது. சம்பந்தப்பட்டவர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X