ஆப்கனில் போர், வறுமை: ஓராண்டில் 6.35 லட்சம் பேர் புலம்பெயர்வு: ஐ.நா., தகவல்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜெனிவா: 'ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து நடப்பு ஆண்டில் மட்டும் 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.ஐ.நா.,வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:ஆப்கனில் 2021ம் ஆண்டில் ஏற்பட்ட போர், வறுமையால் இதுவரை 6.35 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை

ஜெனிவா: 'ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து நடப்பு ஆண்டில் மட்டும் 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.ஐ.நா.,வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:latest tamil news


ஆப்கனில் 2021ம் ஆண்டில் ஏற்பட்ட போர், வறுமையால் இதுவரை 6.35 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து உள்ளனர்.குறிப்பாக, காபூலில் இருந்து வெளியேறிய 1,300 பேருக்கும், குனார் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 9,300 பேருக்கும் ஐ.நா., சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல், மைதான் வார்தாக் மாகாணத்தைச் சேர்ந்த 63 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர். அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க இருக்கிறோம்.


latest tamil news


புலம்பெயரும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகளும் மருத்துவ, கோவிட் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றையும் வழங்க ஐ.நா., அதிக முன்னுரிமை அளிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
22-செப்-202106:41:27 IST Report Abuse
 Muruga Vel அரபிகள் கொஞ்சம் கூட கரிசனம் காட்டுவதில்லையே ..
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-செப்-202102:41:51 IST Report Abuse
மலரின் மகள் தீவிரவாதம் அது மதத்தின் பெயரால் செய்யப்பட்டாலும் முழுதும் கலையப்படவேண்டும். உள்ளூர் மக்களின் எதிர்ப்பு இருக்கவேண்டும். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதும், வறவினர்களிலேயே பலர் தீவிரவாதிகளாக செல்வதற்கு அது ஒரு புனித செயல் என்று எண்ணி அனுப்பியதும், தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை போலும். தீவிரவாதம் அனைவரையும் உடனிருந்து கொள்ளும். எங்கோ சென்று எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்வோர் உள்நாட்டிலும் செய்யத்தான் செய்வார்கள். போதை பொருட்களுக்கு ஆளாக்கி அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுகின்றனர். போதை மருந்திற்காகவும் தவறான பல செயல்கள் எளிதில் கிடைப்பதாலும் தீவிரவாதிகள் பெருகி கொண்டே இருக்கிறார்கள். இது போன்ற பயங்கரவாதிகளை ஹீரோக்களாக கருத்துவோரால் அவர்களுக்கே பிரச்சினை தான். அவர்களின் பிரச்சினையில் நாம் தலையிடாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது. தாமாக சென்று யாருக்கும் உதவி செய்ய கூடாது. உதவி கேட்டாலும் அதற்கு தகுதியானவர்களா என்று அறிந்தே பலமுறை சிந்தித்தே செய்யவேண்டும். தீவிரவாதிகளா பயங்கரவாதிகளா அவர்கள் மதத்தின் பெயரால் நமது நாட்டில் செய்த கொடுன்செயலுக்கு எதிர்ப்பும் கடுமையும் வார்த்தையில் கூட தெரிவிக்கத்தவர்களுக்கு நாம் எதற்காக அனுதாபம் காட்டவேண்டும்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
22-செப்-202100:25:16 IST Report Abuse
Aarkay ஐயோ பாவமென்று இரக்கப்பட தேவையில்லை. அவர்கள் நிலைக்கு அவர்களே காரணம். இங்கும் வந்து குடியை கெடுக்கப்போகிறார்கள். அரசுகள் உஷாராக கண்காணித்தல் நலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X