காங்., முதுகில் குத்தியவர் சரத்பவார்: சிவசேனா தலைவர் கருத்தால் சர்ச்சை

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதற்காக, காங்கிரஸ் முதுகில் குத்திய, சரத்பவார் எங்களது அரசியல் குருவாக முடியாது என சிவசேனா கட்சியின் ஆனந்த் கீதே தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து உள்ளன. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார்.இந்நிலையில்,
சரத்பவார், சிவசேனா, ஆனந்த்கீதே, சஞ்சய்ராவத், காங்கிரஸ், தேசியவாதகாங்கிரஸ், மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா, sharadpawar, anandgete, congress, ncp, sanjayrawat,

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதற்காக, காங்கிரஸ் முதுகில் குத்திய, சரத்பவார் எங்களது அரசியல் குருவாக முடியாது என சிவசேனா கட்சியின் ஆனந்த் கீதே தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து உள்ளன. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார்.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் கீதே கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்தி தான் தேசியவாத காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இரண்டு காங்கிரஸ் கட்சிகளும், ஒரே கட்சியாக முடியாது. சிவசேனா எப்படி காங்கிரசாக முடியும். பவாருக்கு எத்தனை பட்டங்கள் கொடுக்கப்பட்டாலும் கவலையில்லை. அவர் எங்களது அரசியல் குருவாக முடியாது.எங்களது குரு தாக்கரே மட்டுமே. அதிகாரத்திற்காக செய்யப்பட்ட ஏற்பாடுதான் மஹா விகாஸ் கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



இது தொடர்பாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறியதாவது: ஆனந்த் கீதே கூறியது என்ன எனக்கு தெரியாது. சரத்பவார் பெரிய தலைவர் என மட்டுமே நான் கூறுவேன். மஹாராஷ்டிரா அரசின் மிகப்பெரிய தூண். இது ஒருவரின் தனிப்பட்ட கருத்து. கட்சியின் கருத்து அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
22-செப்-202106:02:06 IST Report Abuse
Indhuindian முதுகுல குத்தறதுலே காங்கிரெஸ்த்தான் சாமர்த்தியசாலி அவங்களுக்கே அந்த கதியா வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
22-செப்-202105:58:13 IST Report Abuse
S. Bharani சரத்பவார் பற்றி நாடே அறியும்... இது ஒன்றும் பெரிய புதிய தகவல் இல்லை
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
22-செப்-202102:11:38 IST Report Abuse
sankar ராவத் ஒரு மன்னன் கெட்டவன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X