அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, இன்று (செப்.,21) இறுதி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்.,15ல் துவங்கி நாளை (செப்.,22)
ADMK, Local Body Elections, Candidate List, Final Phase, உள்ளாட்சி தேர்தல், அதிமுக, வேட்பாளர் பட்டியல், இறுதி பட்டியல், வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, இன்று (செப்.,21) இறுதி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்.,15ல் துவங்கி நாளை (செப்.,22) முடிவடைகிறது. இத்தேர்தலில் பா.ம.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன. இடம் பங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க., - பா.ஜ., இடையே தொடர்ந்து பேச்சு நடந்தது. அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.


latest tamil news


அதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், தென்காசி மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்களை, அறிவித்தது. இந்நிலையில், இன்று அதிமுக சார்பில் இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X