உடைந்தது ரெய்னாவின் கிரிக்கெட் மட்டை மட்டுமல்ல ரசிகர்களின் மனதும்தான்...| Dinamalar

உடைந்தது ரெய்னாவின் கிரிக்கெட் மட்டை மட்டுமல்ல ரசிகர்களின் மனதும்தான்...

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021
Share
பரபரப்பாக நடந்து முடிந்த சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் ரெய்னா ஒங்கி அடித்த பந்துடன் உடைந்த கிரிக்கெட் மட்டையின் துகள்களும் சேர்ந்து காற்றில் பறந்தது.ஆனால் அவர் அடிந்த பந்து கேட்சாகி அவுர் நான்கு ரன்களில் அவுட்டானார்.அந்த நேரம் ஸ்டார் டி.வி.,தமிழ் சேனலில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வர்ணனை வந்துlatest tamil news


பரபரப்பாக நடந்து முடிந்த சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் ரெய்னா ஒங்கி அடித்த பந்துடன் உடைந்த கிரிக்கெட் மட்டையின் துகள்களும் சேர்ந்து காற்றில் பறந்தது.ஆனால் அவர் அடிந்த பந்து கேட்சாகி அவுர் நான்கு ரன்களில் அவுட்டானார்.
அந்த நேரம் ஸ்டார் டி.வி.,தமிழ் சேனலில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வர்ணனை வந்து விழுந்தது
‛உடைந்தது கிரிக்கெட் மட்டை மட்டுமல்ல சென்னை சிஎஸ்கே அணி ரசிகர்களின் மனசும்தான்' என்று ரெய்னா அவுட் ஆனதை சோகத்துடன் வர்ணனையாளர் ஒருவர் பதிவு செய்தார்.


latest tamil news


அந்த வர்ணனையாளர் பெயர் முத்து, போட்டி முடியும் வரை இப்படியான அவரது வர்ணனை தொடர்ந்த காரணத்தால் போட்டியின் சுவராசியம் கூடியது,அவரிடம் பேசிய போது வர்ணனையாளர்களின் உலகமும் புரிந்தது
சென்னையைச் சேர்ந்த முத்து கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு பலவித ஊடகங்களில் பணியாற்றினார்.இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்கு ஒரு வர்ணனையாளர் தேவை என்பதை அறிந்து விண்ணப்பித்தார், பலவித டெஸ்ட்டுகளுக்கு பிறகு வர்ணனையாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அந்த சேனலின் தமிழ் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.கிரிக்கெட் விளையாடுவதும் பார்ப்பதும் அதுபற்றி விவாதிப்பதும் இவரது ரத்தத்திலேயே கலந்து இருந்ததால் இன்றயை தேதிக்கு பலரும் பாராட்டும் சிறந்த வர்ணனையாளராக வலம் வருகிறார். இவரை பார்த்தால் இவருடன் படம் எடுக்கவும் கையெழுத்து வாங்கவும் என்று இவருக்கு ரசிகர்கள் கூட்டமே உண்டு.
இதற்காக நிறையவே உழைத்து வருகிறார். வர்ணனைக்கு போவதற்கு முன்பாக அன்று நடைபெறும் விளையாட்டு வீரர்களின் வரலாறு மைதானத்தின் தன்மை கடந்த காலங்களில் நடந்த போட்டிகளின் விவரம் என்று முழுமையாக தெரிந்து கொண்டு செல்கிறார் இதற்காக இரண்டு நாள் கூட செலவிடுகிறார்,கூடவே மொழி அறிவும் செறிவும் இருப்பதால் எளிதில் சோபிக்கிறார்.
ஆரம்பத்தில் இங்கிலாந்தில் நடந்த போட்டியை மைதானத்திற்கு நேரிடையாக சென்று வர்ணனை செய்தார் அதன்பிறகு மும்பையில் உள்ள அலுவலகத்தில் அமர்ந்து நாம் எப்படி டி.வி.,யை பார்க்கிறோமோ அதே போல டி.வி.,யை பார்த்து வர்ணனை செய்கிறார்.
ஆறு பேர் வரை போட்டியின் வர்ணனையாளராக இருப்போம் நான் ‛லீட் காமெண்டர்' என்ற முதன்மை வர்ணனையாளராக இருப்பேன், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த்,சடகோபன் ரமேஷ்,பத்திரிநாத் போன்றவர்கள் ‛லீட் எக்ஸ்பர்ட்' என்ற இடத்தில் இருந்து வர்ணனை செய்வர்.நடந்து கொண்டிருப்பதை நான் சுவராசியமாக சொல்வேன் இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை விவரமாக ‛லீட் எக்ஸ்பெர்ட்டாக' இருப்பவர்கள் சொல்வார்கள்.
இத்தனை நாளும் புரியாத மொழியில் கிரிக்கெட் பார்த்து வந்த நமது ரசிகர்கள் தமக்கு புரிந்த பிடித்த தாய் மொழியில் கிரிக்கெட் பார்ப்பது என்பது மகிழ்ச்சியான விஷயமாக மாறிப்போயிருக்கிறது.
இதன் காரணமாக தமிழை தொடர்ந்து கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,பெங்காலி மொழியில் கூட தற்போது வர்ணனை செய்யப்படுகிறது.
இத்தனை பிராந்திய மொழிகளில் வர்ணனை செய்யப்பட்டாலும் தமிழில் பார்க்கும் ரசிகர்கள்தான் அதிகம்
அந்தந்த அணியின் வெற்றி தோல்வி நிலவரத்திற்கு ஏற்ப ரசிகர்களின் முகபாவங்களை காட்டுவது எப்படி என்று கேட்டபோது விருப்பமுள்ள ரசிகர்கள் லேப்டாப் கேமிராவை ஆன் செய்து கொண்டு அமர்ந்திருப்பர் அவர்கள் அனுமதியுடன் முகங்களை காட்டுவோம் என்றார்.
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பது போல வர்ணனையாளர்களான நாங்களும் ஜென்டில்மேன்கள்தான் நகைச்சுவைக்காக ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டாலும் உடனே அதை மறந்து விடுவோம்.
டுவெண்டி டுவெண்டி தவிர டெஸ்ட் மேட்ச்,கபடி மேட்ச் என்று விளையாட்டு தொடர்பான பல வித வர்ணனை நிகழ்வில் பங்கேற்கிறார், இது போக இவர் தனியாக ஒரு யூட்யூப் சேனலும் நடத்தி வருகிறார், இப்படி வருடம் முழுவதும் பிசியாக இருந்தாலும் வாழ்க்கை சுவராசியமாகவே இருக்கிறது கிரிக்கெட்டைப் போல என்று சொல்லி முடித்தார் முத்து.
-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X