முந்த்ரா துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல்: அதானி போர்ட்ஸை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,988 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது. அத்துறைமுகத்தை அதானி போர்ட்ஸ் நிர்வகிப்பதால் அந்நிறுவனத்தை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.சில நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,988 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது. அத்துறைமுகத்தை அதானி போர்ட்ஸ் நிர்வகிப்பதால் அந்நிறுவனத்தை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.



latest tamil news




சில நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னரில் ஆப்கன் போதைப்பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆய்வு செய்து 2 கண்டெய்னர்களை கைப்பற்றி அதிலிருந்து மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர். தடயவியல் ஆய்வில் ஹெராயின் என்பது உறுதியானது.

ஆப்கானிஸ்தானிலிருந்து இவை டால்கம் கற்கள் என்று ஈரானுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் சோதனை நடந்தது. சென்னையைச் சேர்ந்த ஆஷி வர்த்தக நிறுவன உரிமையாளர்களான கணவன் சுதாகர், மனைவி துர்கா வைஷாலி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஹெராயின் வெளிநாட்டிலிருந்து வந்த விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது. ஏனெனில் இந்த துறைமுகத்தை நிர்வகிப்பது குஜராத்தை தலைமையிடமாக கொண்ட அதானி நிறுவனம். ஏற்கனவே பல முறை காங்கிரஸ் எம்.பி., ராகுல், தொழிலதிபர் அதானிக்காக மோடி சலுகைகள் வழங்கியதாக கூறியுள்ளார். இதனால் இந்த ஹெராயின் விவகாரத்தை அதானி போர்ட்ஸ் நிறுவனத்துடன் முடிச்சுப்போட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் டுவிட்டரில் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதற்கு பா.ஜ.க.,வினர் பதிலடி தருகின்றனர்.

அதானி நிறுவனம் நாடு முழுவதும் 12 துறைமுகங்களை நிர்வகிக்கிறது. அதில் முந்த்ரா, டுனா, தாஹேஜ், ஹசிரா ஆகிய நான்கு துறைமுகங்கள் குஜராத்தில் உள்ளன. இதில் முந்த்ரா துறைமுகத்தில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் அனைத்து கண்டெய்னர்கள், பேரல்கள், எரிவாயு ஆகிய அனைத்து சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. அதனால் ஹெராயின் பிடிப்பட்டதற்கு அந்நிறுவனத்தை விமர்ச்சிக்கின்றனர்.


latest tamil news



இதற்கு பதிலடி தந்துள்ள காங்., எதிர்ப்பாளர்கள் “இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டால் அதற்காக இந்திரா, ராஜிவை குற்றம்சாட்டுவது போன்றது தான் மூளையில்லாதவர்கள் இந்த குற்ற்ச்சாட்டும்.” என கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:03:27 IST Report Abuse
jayvee மத்திய சுங்க இலாகா மற்றும் ஹோம் மினிஸ்ட்ரி இரண்டும் கூட்டாக செயல்பட்டு இந்த நடவடிக்கியை மேற்கொண்டுள்ளனர்.. மேலும்.. தனியார் துறைமுகம் என்றாலும், தணிக்கை செய்வது மத்திய அரசே..
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-செப்-202102:34:56 IST Report Abuse
மலரின் மகள் போதை பொருள் கடத்தல் விற்பது பயன்படுத்துவதும் பயங்கரவாதமே.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
22-செப்-202100:11:22 IST Report Abuse
Aarkay எங்கள் சென்னை துறைமுகம் வந்துபாருங்கள். எவ்வளவு பாலிடிக்ஸ், எவ்வளவு குண்டாயிசம், தடுத்திநிறுத்தி முழுமையாய் சோதனை செய்ய எந்த CISF-காவது தில் உண்டா? இலங்கைக்கு சென்று சுட்டான், சுட்டான் என்று அலறுவது எதற்கு? கண்டுபிடித்தால்தானே வெளியே தெரியும்? நாங்கள் கமுக்கமாக மறைத்துவிடுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X