'காஸ்' சிலிண்டர் வெடித்து தாய், மகள் பரிதாப பலி

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சமையல் 'காஸ்' சிலிண்டர் வெடித்து, தாய், மகள் பலியாயினர். காப்பாற்றும்படி வயதான பெண், நீண்ட நேரம் பால்கனியில் நின்று அலறியும் அவரை யாராலும் காப்பாற்ற முடிவில்லை. கர்நாடக மாநிலம் பெங்களூரு - ஓசூர் ரோடு அருகிலுள்ள பொம்மனஹள்ளி அடுத்த தேவரசிக்கனஹள்ளியில், 'அஷ்ரித் ஆஸ்பைர்' என்ற நான்கு மாடிகளை உடைய அடுக்கு மாடி
பெங்களூரு, அடுக்குமாடி, குடியிருப்பு,தீ, 2  பெண்கள், பலி

பெங்களூரு : பெங்களூரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சமையல் 'காஸ்' சிலிண்டர் வெடித்து, தாய், மகள் பலியாயினர். காப்பாற்றும்படி வயதான பெண், நீண்ட நேரம் பால்கனியில் நின்று அலறியும் அவரை யாராலும் காப்பாற்ற முடிவில்லை.

கர்நாடக மாநிலம் பெங்களூரு - ஓசூர் ரோடு அருகிலுள்ள பொம்மனஹள்ளி அடுத்த தேவரசிக்கனஹள்ளியில், 'அஷ்ரித் ஆஸ்பைர்' என்ற நான்கு மாடிகளை உடைய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 72 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் வசித்து வந்தனர்.


latest tamil news



மூன்றாவது மாடியின் 210வது பிளாட்டில் இன்று (செப்.21) மாலை சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர சத்தம் ஏற்பட்டது.

அந்த பிளாட்டின் சமையலறையிலிருந்து புகை வந்தது. உடனே அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்போர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

ஒரு சில நிமிடத்தில் அந்த வீடு முழுதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது வீட்டின் பால்கனியில் வயதான பெண் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தீயை பார்த்து பயந்த அவரால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.

பால்கனியை சுற்றி இரும்பு வேலி போடப்பட்டிருந்ததால், வெளியிலும் வர முடியவில்லை. வெளியில் இருப்பவர்களாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை; 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என அவர் கூச்சலிட்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது தீப்பிடித்தது; தீயுடன் அங்கும், இங்கும் அலைந்து உயிரை விட்டார். இதற்குள் நான்காம் மாடிக்கும் தீ பரவியது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர், ஐந்து வாகனங்களில் வந்து, மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட பிளாட்டில் இரண்டு பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்கள் லட்சுமிதேவி, 82, பாக்யா ரேகா, 59, என்பதும், இருவரும் தாய், மகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X