பொது செய்தி

தமிழ்நாடு

ஏழைகளுக்கு வீடு கட்டித்தர சிறப்பு பணிப்பிரிவு அமைப்பு

Added : செப் 21, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக ஊரக பகுதிகளில், நிலம் மற்றும் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கி, ஊரக வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர, சிறப்பு பணிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.குடிசைகள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்; 2022க்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.இதற்காக துவக்கப்பட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்
 ஏழைகளுக்கு வீடு கட்டித்தர சிறப்பு பணிப்பிரிவு அமைப்பு

சென்னை:தமிழக ஊரக பகுதிகளில், நிலம் மற்றும் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கி, ஊரக வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர, சிறப்பு பணிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

குடிசைகள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்; 2022க்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.இதற்காக துவக்கப்பட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், குடிசைகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளித்தாலும், நிலமற்ற பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் பெற இயலவில்லை.

அதற்கு தீர்வு காண, வருவாய்த் துறை செயலர், பிரதம மந்திரி குடியிருப்பு ஊரக திட்டத்தை செயல்படுத்தும் அரசு செயலர் இடம் பெற்ற சிறப்பு பணிப்பிரிவு அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, வருவாய்த் துறை அரசு முதன்மை செயலரை தலைவராகவும், ஊரக வளர்ச்சித் துறை செயலரை துணைத் தலைவராகவும், நில நிர்வாக ஆணையரை உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரை உறுப்பினர் செயலராகவும் கொண்ட, சிறப்பு பணிப்பிரிவு அமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இந்த குழுவினர், 2011 சமூக பொருளாதார கணக்கெடுப்பின்படி, நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமற்ற பயனாளிகளுக்கு விரைவில் நிலம் ஒதுக்கி, வீடுகள் கட்டித்தரும் பணியை விரைவுபடுத்துவர்.இந்த குழு வாயிலாக, குடிசைகளே இல்லாத தமிழகம் என்ற குறிக்கோளை எய்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X