சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எகிறும் இதய துடிப்பு!

Added : செப் 21, 2021
Share
Advertisement
எகிறும் இதய துடிப்பு!'ஒரு சில மாநிலங்களில் முதல்வர்களை மாற்றியதற்காக, எல்லா மாநிலங்களிலும் மாற்ற வேண்டும் என சட்டம் உள்ளதா என்ன...' என, தன் அரசியல் எதிரிகளைப் பார்த்து ஆவேசப்படுகிறார் திரிபுரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ். இவர், மற்ற அரசியல்வாதிகளை விட சற்று வேறுபட்டவர். சர்ச்சைக்குரிய வகையில் எதையாவது பேசி, அது குறித்து பெரும்

அக்கம் பக்கம்


எகிறும் இதய துடிப்பு!



'ஒரு சில மாநிலங்களில் முதல்வர்களை மாற்றியதற்காக, எல்லா மாநிலங்களிலும் மாற்ற வேண்டும் என சட்டம் உள்ளதா என்ன...' என, தன் அரசியல் எதிரிகளைப் பார்த்து ஆவேசப்படுகிறார் திரிபுரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ். இவர், மற்ற அரசியல்வாதிகளை விட சற்று வேறுபட்டவர். சர்ச்சைக்குரிய வகையில் எதையாவது பேசி, அது குறித்து பெரும் விவாதத்தை கிளப்பி விட்டு அமைதியாக வேடிக்கை பார்ப்பார். சில நேரங்களில் பா.ஜ., மூத்த தலைவர்களே, 'பிப்லப் குமார் தேவ் வாய்க்கு கடிவாளம் போட்டால் தான் சரியாக வரும்' என, எரிச்சல் படுவதும் உண்டு. சமீப காலமாக பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். குஜராத் உட்பட மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் மாற்றப்
பட்டுள்ளனர். இதையடுத்து, 'பிப்லப் குமார் தேவின் பதவியும் விரைவில் பறிக்கப்பட உள்ளது' என, அவரது அரசியல் எதிரிகள் வதந்தியை பரப்பி விடுகின்றனர். இதனால் கடும் கோபம் அடைந்துள்ள பிப்லப் குமார், 'நான் நன்றாகத் தான் செயல்படுகிறேன். மீதமுள்ள இரண்டு ஆண்டு பதவிக் காலத்தையும்
பிரச்னையின்றி நிறைவு செய்வேன்' என்கிறார்.பா.ஜ.,வில் உள்ள சிலரோ, 'வாயை வைத்துத் தான் பிப்லப் குமார் காலத்தை ஓட்டுகிறார். செயல்பாடு மோசம். விரைவில் அவரது பதவி பறிபோகும்' என கூறி, அவரது இதய துடிப்பை எகிற வைக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X