சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

என்னங்க அரசின் நியாயம்?

Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
என்னங்க அரசின் நியாயம்?எம்.கே.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஆயுள் முழுவதும் நாத்திகம் பேசி, பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவாக பேசி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வ உருவங்களை மட்டும் நிந்தித்து வாழ்ந்து, மறைந்தவர், 'நாத்திக பேரொளி'யான தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.அதாவது அவரை பொறுத்தவரையில் ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகம். மற்ற மதங்களை


என்னங்க அரசின் நியாயம்?எம்.கே.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஆயுள் முழுவதும் நாத்திகம் பேசி, பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவாக பேசி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வ உருவங்களை மட்டும் நிந்தித்து வாழ்ந்து, மறைந்தவர், 'நாத்திக பேரொளி'யான தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.அதாவது அவரை பொறுத்தவரையில் ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகம். மற்ற மதங்களை ஆதரிப்பார்.கருணாநிதி வழியில் வந்த அவரது மகன் முதல்வர் ஸ்டாலினும், அதே கொள்கையை தான் கடைப்பிடிக்கிறார்.முதல்வரானதும், கோவில்களில் மட்டும் தமிழில் அர்ச்சனை செய்யும்படியும், தமிழே சரியாக உச்சரிக்க தெரியாதோரை அர்ச்சகராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.இதற்கு பெயர் தான் மதசார்பின்மையா?கொரோனா நோய் பரவல் காரணமாக, கோவிலுக்குள் நுழைய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உண்டியல்கள் காலியாக தான் இருக்கும். புதியதாக நியமிக்கப்பட்டோருக்கு எவ்வாறு சம்பளம் கொடுக்க முடியும்?
குருக்களையும், பட்டர்களையும் இழிவுப்படுத்தும் வகையில் சரியான பயிற்சி இல்லாதோரை, அர்ச்சகர்களாக நியமித்திருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.'சீர்திருத்தம்' என்ற பெயரில், காலங்காலமாக கோவில்களில் நடந்து வரும் பூஜை முறைகளை களங்கப்படுத்தும் முயற்சியில், முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இந்த சீர்திருத்த நடவடிக்கையை, பிற மதங்களில் செயல்படுத்த கனவிலும் அவர் நினைக்க மாட்டார்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஏப்., 14ம் தேதி தமிழ் புத்தாண்டை, ஜன., 14ம் தேதிக்கு மாற்றினார். கிறிஸ்துமஸ் தினத்தையோ, பக்ரீத் மற்றும் ரம்ஜான் தேதிகளையோ அவ்வாறு மாற்ற முடியுமா?கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், சர்ச் மற்றும் மசூதியில் தமிழ் தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்த முடியுமா?கோவில்களில் இருக்கும் அறநிலைய துறை அலுவலகங்கள் போல, சர்ச் மற்றும் மசூதியில் ஏதும் கிடையாது; அது ஏன்?கோவில் வருமானம் அரசுக்கு செல்ல வேண்டும்; சர்ச் மற்றும் மசூதியில் கிடைப்பது மட்டும் அந்தந்த மதத்தினருக்கு மட்டும் கிடைக்க வேண்டுமா? என்னங்க அரசின் நியாயம்?முதல்வர் ஸ்டாலின், கோவில் விஷயத்தில் தலையீடு செய்வதை விட, விலைவாசி குறைப்பு, தரமான கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.


நடுநிலை என்பதற்கு சாட்சி!பூ.ச.சக்திவேல் ராஜா,'தினமலர்' முன்னாள் நிருபர், ராஜபாளையத்திலிருந்து எழுதுகிறார்: ராஜபாளையத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சேர்மன் கே.எம்.சங்கர் ராஜா காலத்தில், 31 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது.கடந்த 1957 முதல் 1961 வரை ராஜபாளையம் நகர் மற்றும் அய்யனார் கோவில் பகுதிகளில் குழாய் பதித்தல் மற்றும் நீர் தேக்க அணை கட்டும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடந்தன.
இவை அனைத்தும் 1963 இறுதியில் நிறைவு செய்யப்பட்டு, சோதனை முறையில் குழாய்கள் வாயிலாக நகரிலுள்ள மேல்நிலை தொட்டிக்கு கொண்டு வந்து, அனைத்து வார்டுகளின் தெருக்குழாய்களில் குடிநீர் வழங்கப்பட்டது.கடந்த 1964ல் பணிகள் நிறைவு செய்தாலும், விதிகளின்படி 10 ஆண்டுகள் நகர் மக்களுக்கு குடிநீர் வழங்கலை, வாரியம் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது.
இப்பொறுப்பை, 1974ல் குடிநீர் வடிகால் வாரியம், ராஜபாளையம் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.ஆனால், நகராட்சி தலைவர் எ.எ.சுப்பராஜா, மத்திய அமைச்சர் பிரமானந்த ரெட்டியை வைத்து, துவக்க விழா நடத்தி, குடிநீர் வழங்கும் பொறுப்பை நகராட்சி ஏற்று கொள்ளலாம் என்ற முடிவுடன் 1975ல் விழா நடத்தினார்.
அந்த காலக்கட்டத்தில் தான், பிரதமராக இருந்த இந்திரா, நாட்டில் 'எமர்ஜென்சி' சட்டத்தை அமல்படுத்தினார். இந்த சட்டப்படி நாடு முழுவதுமே யாரும் பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவை நடத்தக் கூடாது.ஆனால், ராஜபாளையத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமானந்த ரெட்டியை தனி திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த ஊர்வலத்தில் யானை முன் செல்ல இருசக்கர வாகனங்கள், அதை தொடர்ந்து சைக்கிள்கள், தொழிலாளர்கள், கட்சியினர் என நீண்ட வரிசை களை கட்டியது.

எமர்ஜென்சியை உத்தரவிட்ட காங்கிரஸ் கட்சியே, அந்த சட்டத்தை மீறியது. நம் நாளிதழில், பிரமானந்த ரெட்டி சென்ற ஊர்வலம் படத்துடன் செய்தியாக வெளியானது. செய்தியில் விதிமீறல் என்ற தகவல் எதுவும் இல்லை. ஆனால், அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அந்த செய்தியை பார்த்து வியந்தனர் என்பது மட்டுமல்ல, 'எமர்ஜென்சியில் எப்படி ஊர்வலம் நடத்தலாம்... வேலியே பயிரை மேய்ந்தது போல காங்கிரசே எப்படி சட்டத்தை மீறலாம்' என்று சிந்திக்க துவங்கினர்.
மாவட்ட எஸ்.பி., கோபாலகிருஷ்ணன் உடனடியாக ராஜபாளையத்திற்கு விரைந்து வந்தார். 'தினமலர்' நிருபரை, போலீஸ் ஜீப்பில் அழைத்து வந்தனர். நிருபர் வந்த உடன், 'எமர்ஜென்சி என்ற சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா... எப்படி செய்தி போடலாம்' எனக் கேட்டு எஸ்.பி., தாறுமாறாக பேச ஆரம்பித்தார்.
அமைதியாக இருந்த நம் நிருபர், 'கொடுத்தவனே பறித்துக் கொண்டான் இது பாட்டு... சட்டம் போட்டது காங்கிரஸ்; அதை மீறியதும் அக்கட்சியினர் தான். இது சட்டம் படுத்தும் பாடு. 'சட்டம் போட்ட கட்சியின் அமைச்சர் ஊர்வலமாக போனது தப்பில்லை. தினமலர் செய்தி போட்டது தப்பா' என திரும்பி கேட்ட பின் தான் எஸ்.பி., அமைதி ஆனார்; நம் நிருபரை பாராட்டினார்.
அதன்பின் தினமலர் நெல்லை அலுவலகத்துடன், எஸ்.பி., பேசியதும், அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததும், செய்திப்பிரிவில் விசாரணை நடத்தியதும் வேறு விஷயம்.'தினமலர்' நடுநிலை நாளேடு என்பதற்கும், தவறு யார் செய்தாலும், எந்த கட்சி செய்தாலும் சுட்டிக் காட்டுவதற்கு தயங்காது என்பதற்கும் ராஜபாளையம் பிரமானந்த ரெட்டி ஊர்வலமே சாட்சி.அன்றும், இன்றும், என்றும், 'தினமலர்' இதழுக்கு வாசகர்கள் தான் எஜமானர்கள். அந்த கோட்டை தினமலர்
என்றும் தாண்டாது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-செப்-202115:34:14 IST Report Abuse
D.Ambujavalli இருபது சதவீதத்தை மட்டும் கட்டிக்காத்து சீராட்டுவார், ஓட்டுக்கு மட்டும் என்பதுசதவீதம் வேண்டும் எல்லா அடாவடியும் இந்து கோயில்கள், சாமிகளிடம் தான் செய்வார்கள் பொறுமை இந்துக்களிடம் மட்டுமில்லை, இந்து சாமிகளிடமும் அதிகம் ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது ஒரு நாள் அறிவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X