பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 21, 2021
'இப்படி பேசிய அந்த அமைச்சர், அதன் பிறகு, உதயநிதியை சந்தித்து, 'உங்களை சொல்லலைண்ணா...' என, நிச்சயம் கூறியிருப்பார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'விஜய் உட்பட நடிகர்களின் அரசியல் வருகை தமிழகத்தில் தோல்வியை தான் சந்தித்துள்ளது; தி.மு.க., ஆட்சியின் போது நடிகர்களின் தாக்கம் எடுபடாது' என, தமிழக அமைச்சர் மனோ

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இப்படி பேசிய அந்த அமைச்சர், அதன் பிறகு, உதயநிதியை சந்தித்து, 'உங்களை சொல்லலைண்ணா...' என, நிச்சயம் கூறியிருப்பார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'விஜய் உட்பட நடிகர்களின் அரசியல் வருகை தமிழகத்தில் தோல்வியை தான் சந்தித்துள்ளது; தி.மு.க., ஆட்சியின் போது நடிகர்களின் தாக்கம் எடுபடாது' என, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினின் அரசியல், தோல்வியுறும் என்கிறாரா?


'பாடம் படிப்பதால் மட்டும் சமூக நீதி வந்து விடாது. மக்களின் மனதில் மாற்றம் வர வேண்டும்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி அறிக்கை:
எங்கள் பல்கலையில் நடப்பு கல்வியாண்டு முதல், சமூகநீதி என்ற தலைப்பில் குறுகிய கால மற்றும் சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்படும். இதை படிக்க பயிற்சி கட்டணம் கிடையாது. 15 வயது நிரம்பிய யாரும் படிக்கலாம்.


'பிறந்த நாள், நினைவு நாளில் மாலை அணிவிக்க வேண்டும்; பிறகு மறந்து விட வேண்டும் என மறைமுகமாக கூறுகிறீர்களோ...' என சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி பேச்சு:
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை, நம் மறைந்த தலைவர் கருணாநிதி, தலையில் துாக்கி வைத்து கொண்டாடினார். எனவே, ஈ.வெ.ரா.,வை போல வி.பி.சிங்கையும் நாம் கொண்டாட வேண்டும்.


'இப்படித் தான் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு உங்கள் கட்சி இளைஞர்களை உசுப்பேற்ற வேண்டும்; இல்லையேல் உறங்கி விடுவர்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
: ஓடும் பாம்பை மிதிக்கும் இளைஞர் பட்டாளம், அ.தி.மு.க.,வில் உள்ள வரை இந்த இயக்கத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. ஆலமரம் போலிருக்கும் இந்த கட்சியை, விழுதுகள் போல இளைஞர்கள் தாங்கிப் பிடிக்க வேண்டும்.



'காங்கிரஸ் அரசுகள் என்ன செய்கின்றன என கண்ணில் எண்ணெய் விட்டு கவனித்துக் கொண்டிருப்பீர்கள் போலிருக்கிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், பெங்களூரு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா அறிக்கை:
திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் சட்ட மசோதா நிறைவேறினால், குழந்தை திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து விடும். இது, குழந்தைகளுக்கு எதிரான காங்கிரசின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X