பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செப்., 22, 1930ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், 1930 செப்., 22ல் பிறந்தவர், பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ். 1951ல், ஜெமினி நிறுவனத்தின், மிஸ்டர் சம்பத் என்ற ஹிந்தி படத்தில் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். கர்நாடக இசை மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் திறமை பெற்றவர். கஸல் பாடல்களையும் அழகாக பாடுவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட எட்டு மொழிகளில்


இதே நாளில் அன்று


செப்., 22, 1930



ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், 1930 செப்., 22ல் பிறந்தவர், பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ். 1951ல், ஜெமினி நிறுவனத்தின், மிஸ்டர் சம்பத் என்ற ஹிந்தி படத்தில் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். கர்நாடக இசை மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் திறமை பெற்றவர். கஸல் பாடல்களையும் அழகாக பாடுவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட எட்டு மொழிகளில் கவிதை புனையும் அளவிற்கு புலமை பெற்றவர். இந்த மொழிகளில் இரண்டு லட்சம் கவிதைகள் எழுதியுள்ளார். சில கவிதை தொகுப்பு நுால்களும் வெளியிட்டிருக்கிறார்.
பல்வேறு மொழிகளில், 1,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். பல பாடல்களும் எழுதியுள்ளார். வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள ஹிந்தி பாடல்களை, இவரே இயற்றினார். கடந்த 2013 ஏப்., 14ல் தன் 82வது வயதில் காலமானார். பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Raghav - chennai,இந்தியா
22-செப்-202111:25:39 IST Report Abuse
Vijaya Raghav அருமையான பாடகர். இவரின் பிறந்த நாளான இன்று மறக்கமுடியாத நாள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X