துறவி மரணத்தில் நீடிக்கும் மர்மம்: முக்கிய சீடர் ஆனந்த் கிரி கைது

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (6+ 29)
Share
Advertisement
லக்னோ : துறவியர் அமைப்பான அகில பாரதிய அகரா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி மரணம் தொடர்பாக, அவரது முக்கிய சீடரான ஆனந்த் கிரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ நகரில் பாகம்பரி மடத்தின் தலைவரான நரேந்திர கிரி, 72, மடத்தில் தன் அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது.''மகந்த் மரணம் தொடர்பாக அனைத்து
துறவி மரணம், தொடரும், மர்மம்,: முக்கிய சீடர், ஆனந்த் கிரி, அதிரடி, கைது

லக்னோ : துறவியர் அமைப்பான அகில பாரதிய அகரா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி மரணம் தொடர்பாக, அவரது முக்கிய சீடரான ஆனந்த் கிரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ நகரில் பாகம்பரி மடத்தின் தலைவரான நரேந்திர கிரி, 72, மடத்தில் தன் அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது.''மகந்த் மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், மகந்த் கிரியின் முக்கிய சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி என்பவரை, ஹரித்துவாரில் போலீசார் கைது செய்துள்ளனர். பிரயாக்ராஜ் போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது:மகந்த் கிரி அறையில் எட்டு பக்கங்கள் அடங்கிய ஆவணம் கைப்பற்றப்பட்டது. அதில் தன் உயிலை அவர் எழுதியுள்ளார். அதில் முக்கிய சீடரான ஆனந்த் கிரி உள்ளிட்ட சிலர் தனக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்தே ஆனந்த் கிரியை கைது செய்துள்ளோம்.

ஆனந்தகிரி போலீசாரிடம் கூறுகையில், 'பணம் கேட்டு மகந்த் கிரியை சிலர் தொந்தரவு செய்தனர். அவரை அவர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும்' என, ஆனந்த் கிரி கூறியுள்ளார். தனக்கு எதிராக சதி நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.

முன்னதாக துறவி மகந்த் கிரிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த மகந்த் கிரியின் உடலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (6+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-செப்-202122:53:18 IST Report Abuse
தமிழவேல் சீடனா.... ஆளப்பார்த்தா சினிமா ஸ்டார் மாதிரி இருக்கானே ...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-செப்-202122:51:05 IST Report Abuse
தமிழவேல் பலர் தூண்டுதலால் 8 பக்க கடிதம் எழுதி வச்சிட்டு, தற்கொலை பண்ணிகிட்டாராம். பிரச்சனைய, யோகிக்கிட்டே, அல்லது பிரதமர்கிட்டேயே சொல்லி இருக்கலாமே ? அதுவும், எதிர்கட்சிமேல சந்தேகம்வேற... ஒருசமயம் அவருக்கே அவுங்க மேலெல்லாம் நம்பிக்கை இல்லையோ.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
21-செப்-202122:47:36 IST Report Abuse
அன்பு ஆஸ்ரம தலைவர் பதவிக்கு போட்டி இருக்காதா என்ன? மனிதர்கள் எப்போதும் சர்வைவர்ஸ் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X