அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா எம்.பி., இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர்கள் மனு தாக்கல்

Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட, தி.மு.க., வேட்பாளர்கள் இருவரும், வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மே 7ம் தேதி தங்களின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர்.வைத்திலிங்கத்தின் எம்.பி., பதவி 2022 ஜூன்
 ராஜ்யசபா எம்.பி., இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை:ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட, தி.மு.க., வேட்பாளர்கள் இருவரும், வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மே 7ம் தேதி தங்களின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர்.வைத்திலிங்கத்தின் எம்.பி., பதவி 2022 ஜூன் 29லும்; கே.பி.முனுசாமியின் எம்.பி., பதவி 2026 ஏப்., 2லும் நிறைவடைய உள்ளது. இருவரும் ராஜினாமா செய்ததால், காலியான எம்.பி., பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இரு பதவிகளுக்கும் தனித்தனியே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்று முன் தினம் வரை, இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒரு சுயேச்சை மனு தாக்கல் செய்தார்.மேலும், முனுசாமி ராஜினாமா செய்த பதவிக்கு, தி.மு.க., சார்பில் கனிமொழி சோமு; வைத்திலிங்கம் ராஜினாமா செய்த பதவிக்கு, தி.மு.க., சார்பில் ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தலைமை செயலகத்தில் சட்டசபை செயலர் சீனிவாசனிடம், தி.மு.க., வேட்பாளர்கள் இருவரும், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர். அப்போது, எம்.பி.,க்கள் கனிமொழி, சிவா, என்.ஆர்.இளங்கோ, வில்சன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உடனிருந்தனர்.வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3:00 மணியுடன் நிறைவடைகிறது. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை இல்லாததால், சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.வேட்பு மனுவை வாபஸ் பெற 27ம் தேதி கடைசி நாள். அன்று மாலை தி.மு.க., வேட்பாளர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-செப்-202116:07:27 IST Report Abuse
Bhaskaran சபை நிறைந்த மருத்துவராக இருக்காங்க சோமுவின் திருமகளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X