பயங்கரவாத எதிர்ப்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயார்: ஐ.நா.,வில் பைடன் பேச்சு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நியூயார்க்:பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சபையின் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ

நியூயார்க்:பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.



latest tamil news




ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சபையின் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்று உரையாற்றினார்.


ஜோ பைடன் பேசியதாவது:



நமது மக்களை சுவாசிக்கவிடும் அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பாக அமெரிக்கா இருக்கும். நமது பாதுகாப்பு, வளர்ச்சி, சுதந்திரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.நாம் இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால பிரச்சினையை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.


latest tamil news





கோவிட்டை வீழ்த்தலாம்



ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் அரசியல் சக்திகளால் கோவிட்டை வீழ்த்தலாம். நாம் இப்போதே செயல்பட வேண்டும். சிகிச்சைக்கான வசதிகளை விரிவுபடுத்தி உலகில் உள்ள உயிர்களை காக்க வேண்டும். எதிர்காலத்தில் உலக சுகாதார பாதுகாப்புக்கான நிதிக்காக புதிய நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதங்களை பெற விடாமல் தடுப்போம்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தபோது இருந்த அதே அமெரிக்கா தற்போது இல்லை. இன்று நாம் சிறந்த ஆயுதங்கள் மற்றும் அதிக திறனுடன் இருக்கின்றோம். இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-செப்-202122:04:53 IST Report Abuse
Ramesh Sargam உலக வெப்பமயமாதலுக்கும் ஒரு முடிவு கட்டுங்க பைடன் சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X