சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

அலட்சியம் வேண்டாம்!

Added : செப் 21, 2021
Share
Advertisement
மன அழுத்தம் தொடர்பாக கூறும், சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் லட்சுமிபாய்: மன அழுத்தம் அதிகரிக்கும் போது தசைகள் இறுகும். தலைவலி, மைக்ரேன் மற்றும் உடல்வலி ஏற்படும். கவனிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத மன அழுத்தம், ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கும்.ரத்த அழுத்தம் அதிகரித்தால் பக்கவாதம் முதல் மாரடைப்பு வரை ஏற்படும் அபாயம் உண்டு. நீரிழிவும்
சொல்கிறார்கள்

மன அழுத்தம் தொடர்பாக கூறும், சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் லட்சுமிபாய்: மன அழுத்தம் அதிகரிக்கும் போது தசைகள் இறுகும். தலைவலி, மைக்ரேன் மற்றும் உடல்வலி ஏற்படும். கவனிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத மன அழுத்தம், ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கும்.ரத்த அழுத்தம் அதிகரித்தால் பக்கவாதம் முதல் மாரடைப்பு வரை ஏற்படும் அபாயம் உண்டு. நீரிழிவும் வரலாம்.மன அழுத்தம் அதிகமாகும் போது சில பெண்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகள் வரும். மன அழுத்தத்தின் விளைவால் 'கார்ட்டிசால்' ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, அதிகம் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு, உடல் பருமன் அதிகரிக்கும்.இனப்பெருக்க வயதிலுள்ள பெண்கள், மன அழுத்தத்தில் இருந்தால் கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகலாம். மாதவிடாய் சுழற்சியில் மாறுதல்கள் ஏற்படலாம். அளவுக்கதிகமான மன அழுத்தம், பெண்களின் இல்லற வாழ்வில் திருப்தியின்மை மற்றும் ஆர்வமின்மைக்கு காரணமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.உடல்நலம் சரியில்லை எனில் மருத்துவரை பார்க்கிறோம். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டால் மட்டும் அலட்சியம் செய்கிறோம்.மனது சரியில்லையெனில், முதலில் வீட்டிலுள்ள நம்பகமான நபர், உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசலாம். அவ்வாறு பேசியும் இயல்புக்கு வர முடியவில்லை எனில், ஆலோசகர்களை அணுக வேண்டும். மன அழுத்தம் என்ற நிலையில் மட்டும் இருக்கிறதா அல்லது அடுத்த கட்டத்தை அடைந்து விட்டதா என்பதை அவர்கள் கண்டறிவர்.மனச்சோர்வால் ஏற்பட்டுள்ள பதற்றம், படபடப்பு போன்ற பிரச்னைகளை போக்கி, உடல், மனதை இலகுவாக்க, 'ரிலாக்ஸ்சேஷன் டெக்னிக்' கொடுக்கப்படும். தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் தவிர, அறிவியல்பூர்வ மான சில டெக்னிக்குகளையும் நிபுணர்கள் வழங்குவர்.அடுத்தபடியாக, நோயாளிகளுடன் பேசி, 'கவுன்சலிங்' கொடுத்து, அவர்களுடைய பிரச்னையை புரியவைத்து, நடத்தையிலும் மாற்றம் கொண்டு வருவர். மேற்குறிப்பிட்ட விஷயங்களால் தீர்வு காண முடியவில்லை என்றால் மாத்திரைகள் கொடுக்கப்படும். பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்கு தெரபியும் தேவைப்படலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X