சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1,500 ஆண்டு பழமையான சிற்பம் நொய்யல் கரையில் கண்டுபிடிப்பு

Added : செப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், 1,500 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.கொடுமுடி - நொய்யல் ஆற்றின் மேற்கு கரையில், அஞ்சூரில் முட்புதர்களுக்கு இடையே கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான இரண்டு சிற்பங்கள் மீட்கப்பட்டன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:கொங்கு மண்டலத்தின் சிறப்பை உணர்த்தும்
 1,500 ஆண்டு பழமையான சிற்பம் நொய்யல் கரையில் கண்டுபிடிப்பு

திருப்பூர்:திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், 1,500 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கொடுமுடி - நொய்யல் ஆற்றின் மேற்கு கரையில், அஞ்சூரில் முட்புதர்களுக்கு இடையே கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான இரண்டு சிற்பங்கள் மீட்கப்பட்டன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் சிற்பங்கள் உள்ளன. கொற்றவை கோவிலுக்கு அருகில் கண்டறியப்பட்டதால், துவாரபாலகி சிற்பமாக இருக்கலாம்.150 செ.மீ., உயரம் - 45 செ.மீ., அகலம், 120 செ.மீ., உயரம் - 60 செ.மீ., அகலத்தில் சிற்பங்கள் உள்ளன. காதில் குழைவகை காதணி, கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி வகை அணிகலனும், கையில் கடகவளை, சூடகமும் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குனர் பூங்குன்றன் கூறியதாவது:தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கொங்கு மண்டலத்தில் உள்ள கலை சிற்பங்களுக்கு எல்லாம் காலத்தால் முற்பட்டவை. ஐந்து அல்லது ஆறாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X