மத்திய அமைச்சர் முருகன் ம.பி.,யில் மனு தாக்கல்

Updated : செப் 23, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
போபால் :மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவருமான முருகன், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய பிரதேசத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த தாவர்சந்த் கெலாட், கர்நாடக கவர்னராக நியமிக்கப்பட்டார். இடைத்
மத்திய அமைச்சர் முருகன் ம.பி.,,மனு தாக்கல்

போபால் :மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவருமான முருகன், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய பிரதேசத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த தாவர்சந்த் கெலாட், கர்நாடக கவர்னராக நியமிக்கப்பட்டார்.


இடைத் தேர்தல்



இதனால் காலியான அந்த இடத்திற்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சமீபத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த முருகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய ம.பி., தலைநகர் போபாலுக்கு வந்த முருகனுக்கு விமான நிலையத்தில் பா.ஜ.,வினர் வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து, மத்திய பிரதேச சட்டசபை வளாகத்திற்கு சென்ற முருகன், ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மாநில பா.ஜ., தலைவர் விஷ்ணு தத் சர்மா ஆகியோர் முன்னிலையில் ராஜ்யசபா இடைத் தேர்தல் அதிகாரி ஏ.பி.சிங்கிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்வது முடிவடைகிறது. நாளை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். வேட்பாளர்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெற 27ம் தேதி கடைசி நாள். போட்டியிருந்தால் அக்., 4ல் தேர்தல் நடக்கும்.


ஆதரவு



ம.பி., சட்டசபையில் மொத்தம் உள்ள 230 இடங்களில், பா.ஜ.,வுக்கு 125 உறுப்பினர்கள் உள்ளனர். காங்.,குக்கு 95, பகுஜன் சமாஜ் கட்சிக்கு இரண்டு, சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு உறுப்பினரும், சுயேச்சைகள் நான்கு பேரும் உள்ளனர்.
மூன்று இடங்கள் காலியாக உள்ளன. பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு உள்ளதால், முருகன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. தலித் வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞரான முருகன், தன்னை மத்திய அமைச்சராக்கி, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
22-செப்-202121:03:37 IST Report Abuse
sankaseshan Former PM Manmokan singh got elected to rajyssba from Assam .
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
22-செப்-202112:45:14 IST Report Abuse
rajan maththiya pradesaththil kondu naadu uthayam
Rate this:
Cancel
22-செப்-202110:57:35 IST Report Abuse
அப்புசாமி இது வெறும் கொல்லைப் புற வழியல்ல. எங்கேயோ வடக்கத்தியான் வீட்டு கொல்லைப் புறம். எப்பிடி நுழைஞ்சா என்ன? நல்லா சாப்புடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X