துறவி மரணம் எதிரொலி முக்கிய சீடர் அதிரடி கைது

Updated : செப் 23, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
லக்னோ :துறவியர் அமைப்பான அகில பாரதிய அகரா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி மரணம் தொடர்பாக, அவரது முக்கிய சீடரான ஆனந்த் கிரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு பிரயாக்ராஜில் உள்ளது பாகம்பரி மடம். அதிர்ச்சிஇதன் தலைவரான நரேந்திர கிரி, 72, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
துறவி மரணம் எதிரொலி ,முக்கிய சீடர் அதிரடி கைது

லக்னோ :துறவியர் அமைப்பான அகில பாரதிய அகரா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி மரணம் தொடர்பாக, அவரது முக்கிய சீடரான ஆனந்த் கிரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு பிரயாக்ராஜில் உள்ளது பாகம்பரி மடம்.


அதிர்ச்சி



இதன் தலைவரான நரேந்திர கிரி, 72, நேற்று முன்தினம் உயிரிழந்தார். மடத்தில் தன் அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது.அகில பாரதிய அகரா பரிஷத் என்ற துறவியர் அமைப்பின் தலைவராகவும் உள்ள அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.மறைந்த நரேந்திர கிரியின் உடலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அஞ்சலி செலுத்தினார். ''நரேந்திர கிரியின் மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது,'' என, யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

''இந்த மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.இந்நிலையில், நரேந்திர கிரியின் முக்கிய சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி என்பவரை, ஹரித்துவாரில் போலீசார் கைது செய்துள்ளனர். பிரயாக்ராஜ் போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது:நரேந்திர கிரி அறையில் எட்டு பக்கங்கள் அடங்கிய ஆவணம் கைப்பற்றப்பட்டது. அதில் தன் உயிலை அவர் எழுதியுள்ளார். மேலும், சிலர் தனக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார். முக்கிய சீடரான ஆனந்த் கிரி குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்தே ஆனந்த் கிரியை கைது செய்துள்ளோம்.


விசாரணை



ஆனால், 'பணம் கேட்டு நரேந்திர கிரியை சிலர் தொந்தரவு செய்தனர். அவரை அவர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும்' என, ஆனந்த் கிரி கூறியுள்ளார். தனக்கு எதிராக
சதி நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
22-செப்-202113:17:37 IST Report Abuse
yavarum kelir சீடன் சவூதி அரேபியாவில் கழுகு ரேஸ் விட்ட மூர்க்கன் என்று கேள்வி. பல உண்மைகள் வெளி வரும் போது இந்த நியூஸ் மூடி மறைக்கப்படும்... மஹாராஷ்டிராவில் சன்யாசிகளை கொன்றது கிறிஸ்தவர்கள் கூட்டம் என்ற உண்மையை எத்தனை நியூஸ் சேனல் ஒளி பரப்பியது?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-செப்-202105:10:47 IST Report Abuse
Kasimani Baskaran துரவிக்கு எதற்கு உயில்?
Rate this:
Subash - Chennai,இந்தியா
22-செப்-202116:53:32 IST Report Abuse
Subashயோகிகிட்ட கேளேன்...சொல்லுவாரு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X