'பைடன் - மோடி முதல் சந்திப்பு இருதரப்பு உறவை மேம்படுத்தும்'

Updated : செப் 23, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன் :'அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான முதல் நேரடி சந்திப்பு, இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்தும்' என, அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.ஐ.நா., பொது சபை கூட்டம், 'குவாட்' அமைப்பின் மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அமைதியான சூழல்வரும் 24ம் தேதி அதிபர் ஜோ
பைடன் - மோடி முதல் சந்திப்பு , உறவை மேம்படுத்தும்

வாஷிங்டன் :'அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான முதல் நேரடி சந்திப்பு, இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்தும்' என, அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.ஐ.நா., பொது சபை கூட்டம், 'குவாட்' அமைப்பின் மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.


அமைதியான சூழல்வரும் 24ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச உள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளதாவது:இரு தலைவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்றுள்ளனர். தொலைபேசியிலும் பலமுறை பேசிஉள்ளனர். அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், இரு தலைவர்களும் முதல் முறையாக நேரில் சந்தித்து பேச உள்ளனர்.இந்த சந்திப்பு இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, அமைதியான சூழலை ஏற்படுத்துவது குறித்து இருவரும் விவாதிப்பர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்தும், பயங்கரவாதத்தை இணைந்து எதிர்ப்பது குறித்தும் விவாதிப்பர். வரும் 24ம் தேதி இரு தரப்பு பேச்சுக்குப் பின், 'குவாட்' அமைப்பின் மாநாட்டிலும் இருவரும் பங்கேற்க உள்ளனர். இதில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டிலும் ஆப்கானிஸ்தான் நிலவரம், இந்தோ - பசிபிக் பிராந்தியம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.அதனால் பைடன், மோடி இடையேயான சந்திப்பு அதற்கு வலு சேர்ப்பதாக அமையும்.தடுப்பூசி வினியோகம்இதைத் தவிர கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு, தடுப்பூசி வினியோகம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில், பிரதமர் மோடியின் பயண விபரங்களை இந்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.


கமலா ஹாரிசுடன் சந்திப்புஇந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக உள்ளார். அவரை, பிரதமர் நரேந்திர மோடி, 23ம் தேதி சந்தித்து பேச உள்ளார். கொரோனா பரவல் தடுப்பு குறித்து இருவரும் ஏற்கனவே தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர். முதல் முறையாக நேரில் சந்திக்க உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
23-செப்-202110:51:41 IST Report Abuse
Venkat Modi mind voice: My dear prend Joe baidhaan
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
22-செப்-202119:33:58 IST Report Abuse
Nagercoil Suresh நல்ல உறவாகத்தானே இருக்கிறது பிறகு இதில எதற்கு மேம்படவேண்டும், தொடரும் எனும் தலைப்பே பிரதானம்...காதலர்கள் திருமணம் வரை பலமணிநேரம் தொடர்ந்து போனிலே இருப்பார்கள் ஆனால் திருமணம் முடிந்த பிறகு போனில் சில நிமிடங்கள் நீடிப்பதே அபூர்வம் அதேபோல் இல்லாமல் நட்பு நாடுகள் எப்போதும் ஒரேபோல் இருக்கவேண்டும் அதையே தான் இந்தியாவும் அமெரிக்காவும் கடைபிடிக்கிறது ...
Rate this:
Cancel
22-செப்-202111:44:31 IST Report Abuse
அப்புசாமி போய்ட்டு வந்த உடன் ஒரு 50000 கோடிக்கு ட்ரோன், ஹெலிகாப்டர்னு ஆர்டர் ஆத்மநிர்பரா கீழே குடுத்துரலாம். பதிலுக்கு அவிங்க இங்கே நல்லா படிக்குறவங்களை விசா குடுத்து வேலைக்கு எடுத்துப்பாங்க. இருநாடு உறவு நமக்கு மொத்தத்தில் நஷ்டத்தில் முடியும்.
Rate this:
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
22-செப்-202114:19:34 IST Report Abuse
Yezdi K Damo"அப் கி பார் ,பைடன் சர்க்கார்" இந்த வாக்கியத்தையும் சேர்த்துக்கோங்க ஸ்வாமிகாரு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X