பொது செய்தி

தமிழ்நாடு

சந்நியாசிகள் நினைத்ததால் துரைமுருகன் அமைச்சராகி விட்டார்: ராமானந்த மகராஜ் தகவல்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
வேலுார்:சந்நியாசிகள் நினைத்ததால் துரைமுருகன் அமைச்சராகி விட்டார் என சந்நியாசிகள் சங்க அமைப்பாளர் ராமானந்த மகராஜ் கூறினார்.அகில பாரத சந்நியாசிகள் சங்கம், பாலாறு மக்கள் இயக்கம் சார்பில் பாலாறு பெருவிழா புஷ்கர்ம் சிறப்பு ஆலோசனை கூட்டம் வேலுார் மாவட்டம், வேலுாரில் இன்று மாலை 5:00 மணிக்கு நடந்தது.பாலாறு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.அகில

வேலுார்:சந்நியாசிகள் நினைத்ததால் துரைமுருகன் அமைச்சராகி விட்டார் என சந்நியாசிகள் சங்க அமைப்பாளர் ராமானந்த மகராஜ் கூறினார்.அகில பாரத சந்நியாசிகள் சங்கம், பாலாறு மக்கள் இயக்கம் சார்பில் பாலாறு பெருவிழா புஷ்கர்ம் சிறப்பு ஆலோசனை கூட்டம் வேலுார் மாவட்டம், வேலுாரில் இன்று மாலை 5:00 மணிக்கு நடந்தது.பாலாறு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.அகில பாரதிய சந்நியாசிகள் சங்க அமைப்பாளர் ராமானந்த மகராஜ் தொடங்கி வைத்து பேசினார்.latest tamil news
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளுக்கும் விழா எடுத்து நதிகளை பாதுகாக்க வேண்டும். நதிகளை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த தலைகாவிரி முதல் பூம்புகார் வரை ஆண்டு தோறும் ரத யாத்திரை நடத்துகிறோம்.

தாமிரபரணி புஷ்கர்ணி விழாவில் ஒரு கோடிக்கு மேலானவர்கள் பங்கேற்றனர். 2019ம் ஆண்டு வைகை பெருவிழா நடத்திய பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தென் பெண்ணை முதல் கடலுார் வரை தென் பெண்ணை ஆற்றை பாதுகாக்க பாத யாத்திரை நடத்தியிருக்கிறோம்.


புஷ்பகரணி நிகழ்ச்சிபாலாற்றை பாதுகாக்க பாலாறு தொடங்கும் இடமான கர்நாடகா மாநிலம், நந்திதுர்கம் மலை குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து கடலில் கலக்கும் செங்கல்பட்டு மாவட்டம் வரையில் அடுத்தாண்டு 2022 ஜன மாதம் 20 ம் தேதி முதல் 222 கி.மீ., துாரம் நதியை பாதுகாக்க விழிப்புணர்வோடு பாலாறு விழா மற்றும் ரத யாத்திரை செய்து பாலாற்றில் சன்னியாசிகளும், குருமார்களும் நீராடி வழிபட்டும், புஷ்பகரணி நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம். ரதத்தில் ஏழு கலசங்களில் பாலாற்று நீரை எடுத்து வந்து வழியெங்கும் பூஜைகள் நடக்கும்.

போகும் வழிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் கொடுத்து வழிபாடுகள் நடத்தப் போகிறோம். இதற்காக அந்தந்த பகுதியில் உள்ள சந்நியாசிகள் இப்போது முதலே நதிகளை வணங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.பாலாறு மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். நதியை நீராகப் பார்க்காமல் தெய்வமாக பார்த்து தினமும் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். இயற்கையை பாதுகாத்து நன்றி செலுத்த வழிபாடு நடத்தி மதிக்க வேண்டும்.

நதி நமக்கு நன்மை செய்ய நன்றி உணர்வோடு துாய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் சரியான செயல் திட்டங்கள் கொண்டு வர வேண்டும். ஆறுகளில் தடுப்பணை கட்டி நீரை தேக்கினால் ரசாயன கழிவுகள் கலக்காது. மக்களும் பாலாறு போன்ற நதிகளை பாதுகாக்க வேண்டும்.பாலாற்றை பாதுகாக்க , திருப்பத்துார் மாவட்டம், திருப்பத்துாரில் கடந்த மார்ச் மாதம் 20 ம் தேதி அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது தமிழகத்தில் நீர் வளத்துறைக்கு என்று தனியாக துறையை உருவாக்கி ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம்.

புதியதாக பதவி ஏற்ற தி.மு.க., அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று நீர் வளத்துறைக்கு அமைச்சராக துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் நியமித்து விட்டார். சாதுக்கள் நினைத்ததால் துரைமுருகன் நீர் வளத்துறை அமைச்சராகி விட்டார்.பாலாறு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க அமைச்சர் துரைமுருகன் மூலம் அழைப்பு விடுக்கப்படும்.


latest tamil news
நாட்டில் சரஸ்வதி நதி, ஈரோடு அருகே அனுமந்த நதி என 60 நதிகள் காணாமல் போய் விட்டது. காவிரி ஆற்றில் 52 கிளை நதிகள் இருந்தது. தற்போது 30 தான் உள்ளது. காணாமல் போன நதிகள், கிளை நதிகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை மீட்போம். இவ்வாறு அவர் கூறினார்.சங்க செயலாளர் ஆத்மானந்தம், ராணிப்பேட்டை பிம்மானந்த சரஸ்வதி சுவாமிகள், ஜெயராம் குருஜி, தோப்பா சுவாமிகள் மடம் மடாதிபதி பிரகாஷ்நந்த சுவாமிகள், விஜய பாரத மக்கள் கட்சி மாநில செயலாளர் சரவணன், திருப்பத்துார் மாவட்ட தலைவர் ஆனந்தன், ராஜ கோபால் குருஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-202110:35:07 IST Report Abuse
ஆரூர் ரங் ஏதோ கிண்டல் செய்கிறார்😉. துரை முருகன் குடும்பம்தான் அங்கு நிலத்தடி நீரை சுரண்டி அருவி மினரல் வாட்டர் சர்வீஸ் நடத்துகிறது . காவிரி பாலாற்றை😪 வறண்டு போக வைத்தது அவர் கட்சிதான்
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
22-செப்-202110:10:07 IST Report Abuse
Ganesh இந்த மாதிரி எல்லோரும் வரும் காலங்களில் சொல்லிக்கொள்ளலாம். நாங்கள் ஜெபித்ததால் இவர்கள் ஜெயித்தார்கள் என்று.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
22-செப்-202116:17:49 IST Report Abuse
Visu Iyerசோறு கிடைக்க வேண்டாமா.. வயிறு வளர்க்க வேண்டாமா...
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
22-செப்-202107:46:42 IST Report Abuse
S. Bharani இனம் இனத்தோடு தான் சேரும் இந்த சாமியார்கள் கூட்டம் ஓசி சோற்றில் வயிறு வளர்க்கும் கூட்டம் சேர்த்து பொருள் கொள்க
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
22-செப்-202116:19:58 IST Report Abuse
Visu Iyerஒரு தட்டில் பழங்கள் தட்சணை கொடுத்தால் அவர்கள் நல்லவர் என்று சொல்பவர்கள் இன்னமும் சாமியார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.. என்பது மக்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கு .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X