அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடல் அரிப்பை தடுக்க பழனிசாமி வலியுறுத்தல்

Updated : செப் 23, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி யின் அறிக்கை:கடந்த 45 நாட்களுக்கும் மேலாக, நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல் நீர், 100 மீட்டர் துாரம் ஊருக்குள் வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.நாகப்பட்டினம் நகரம், நம்பியார் நகர் மீனவ கிராம மக்களுக்கு, அ.தி.மு.க., அரசு, சிறு மீன்பிடித் துறைமுகம் கட்ட ஆணை பிறப்பித்து, தற்போது பணிகள்
கடல் அரிப்பு, தடுப்பு, பழனிசாமி, வலியுறுத்தல்

சென்னை : சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி யின் அறிக்கை:கடந்த 45 நாட்களுக்கும் மேலாக, நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல் நீர், 100 மீட்டர் துாரம் ஊருக்குள் வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
நாகப்பட்டினம் நகரம், நம்பியார் நகர் மீனவ கிராம மக்களுக்கு, அ.தி.மு.க., அரசு, சிறு மீன்பிடித் துறைமுகம் கட்ட ஆணை பிறப்பித்து, தற்போது பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இப்பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாகி உள்ளது.

கடல் அரிப்பால், 10 வீடுகள், பல மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன.கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என, இப்பகுதி மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், நாகப்பட்டினம் நகருக்கும் பாதிப்பு ஏற்படும் ஆபத்தான நிலை உள்ளது.கடந்த 1994 - 95ல் இதுபோன்ற நிலைமை ஏற்பட்ட போது, உடனடியாக ஜெயலலிதா, அதிகாரிகளை அழைத்து, போர்க்கால அடிப்படையில், மீட்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.

கடல் அலைகளின் வேகத்தை தடுக்கும் வகையில், நுாற்றுக்கணக்கான பனை மரங்கள், கடல் மணலில் புதைக்கப்பட்டு, அலைகளின் வேகம் பெருமளவில் தடுக்கப்பட்டு, கடல் அரிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது.அதுபோல, தி.மு.க., அரசும், நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராமம் உட்பட, கடல் நீர் உட்புகுந்த, அனைத்து இடங்களிலும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் கடல் அரிப்பை தடுக்க ITCH GAURD ZALIM LOTION உபயோகிக்க வேண்டும். இது கூடத் தெரியாத மட சங்கிகளே!
Rate this:
Cancel
Subash - Chennai,இந்தியா
22-செப்-202114:20:30 IST Report Abuse
Subash வெட்டிநடை போட்டு கொடநாடு வென்ற வேந்தனே நீ வாய்க....
Rate this:
Cancel
Subash - Chennai,இந்தியா
22-செப்-202114:19:34 IST Report Abuse
Subash கொடநாடு கண்ட வேந்தே நீ வாய்க...உன் புகய் வாய்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X