அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரத்தை பெற போராட்டம்: கமல்

Updated : செப் 23, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (5+ 23)
Share
Advertisement
சென்னை :'தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களை போராடியே பெற வேண்டி உள்ளது' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என, பஞ்சாயத்து தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில்
அதிகாரம்,  பெற  போராட்டம்: கமல்

சென்னை :'தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களை போராடியே பெற வேண்டி உள்ளது' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என, பஞ்சாயத்து தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு
நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களை போராடித் தான் பெற வேண்டி இருப்பதன் அடையாளம் இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பிக்பாசில் கமல், 'பிசி' மய்யத்தினர் ஏமாற்றம்!



சென்னை : சட்டசபை தேர்தலின் போது, முதல் அணியாக கூட்டணியை அறிவித்த கமல், தற்போது பிக்பாசில், 'பிசி'யாக இருப்பதால், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்னும் அறிவிக்காமல் உள்ளார் என, அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினரே புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.பல இடங்களில் பிரசாரமும் களை கட்டி வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இன்னமும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. கட்சியை மறந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில், கமல் பிசியாக இருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.

'தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்த வேண்டிய நிலையில், கமல் மக்களையும், மய்யத்தையும் மறந்து, பிக்பாசில் பிசியாக இருப்பதால், இந்த உள்ளாட்சி தேர்தலிலும், பூஜ்யத்தோடு நடையை கட்ட வேண்டியது தான்' என்றும் கட்சியினர் புலம்புகின்றனர்.அதேநேரத்தில், 'வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்; அதில் நம் பெயர் இடம் பெற்று மனுத்தாக்கல் செய்யலாம்' என மய்ய நிர்வாகிகள் பலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:32:37 IST Report Abuse
jayvee ஷூட்டிங் கேப்புல இப்படி எதாவது உளறிட்டு மக்களை மட்டுமல்லாமல் மிச்சம் மீதி இருக்கிறம் மயத்தினரையும் குழப்பவேண்டியது..
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
22-செப்-202112:40:48 IST Report Abuse
Anand ஏற்கனவே இவன் இந்நாட்டை விட்டு ஓடிப்போய்விடுவேன் என கூறி வெட்கமில்லாமல் இன்னமும் உளறிக்கொண்டு இங்கேயே அலைகிறான்...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
22-செப்-202110:37:58 IST Report Abuse
vbs manian இவர் இருக்கும் சினிமா உலகி l துணை i இயக்குனர் எக்ஸ்ட்ரா நடிக நடிகை டெக்கனிசியன் டப்பிங் துறையில் உள்ளவர்கள் நிலை மிக மோசம் என்று செய்திகள். முதலில் அவர்களுக்காக ஏதாவது இவர் செய்வாரா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X