பா. ஜ.,ஆளும் தேவபூமியில் தொடரும் பாலியல் அத்துமீறல்: உத்தவ் தாக்கரே தாக்கு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் சகினாகா பகுதியில் முன்னதாக பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து மத்திய அரசு பார்லிமென்டில் விவாதித்து பெண்களைப் பாதுகாக்க வழிவகை செய்யவேண்டும் என்று மாநில முதல்வர் தாக்கரே கவர்னருக்கு அளித்த கடிதத்தில்

மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் சகினாகா பகுதியில் முன்னதாக பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து மத்திய அரசு பார்லிமென்டில் விவாதித்து பெண்களைப் பாதுகாக்க வழிவகை செய்யவேண்டும் என்று மாநில முதல்வர் தாக்கரே கவர்னருக்கு அளித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



latest tamil news




மஹா., மாநில கவர்னர் பிஎஸ் கோஷ்யாரிக்கு மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உத்தரகாண்ட் உள்ளிட்ட பாஜ., ஆளும் மாநிலங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து இந்த கடிதத்தில் பட்டியலிட்ட உத்தவ் தாக்கரே, ஜனநாயக நாட்டின் பார்லிமென்ட் செயல்பாடுகளை கவர்னரின் கருத்து மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக 34 வயதான பெண் ஒருவர் சகினாகா பகுதியில் டெம்போ ஒன்றில் 45 வயது காமுகனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உத்தவ், மஹா., மாநில அரசு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுக்க தீவிர முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்தார்.

ஆனால் அது மட்டும் போதாது எனவும் பார்லிமென்டில் பெண்கள் பாதுகாப்புக்காக தீவிர முயற்சி மற்றும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆராய வேண்டும் எனவும் கவர்னர், தான் சார்ந்திருக்கும் பாஜ., கட்சியை வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


வன்முறை அதிகரிப்பு



மஹா.,வின் அண்டை மாநிலமான குஜராத்தில் 14,229 பெண்கள் காணவில்லை என முன்னதாக தகவல் வெளியாகியது. மஹா., கவர்னரின் சொந்த மாநிலமான 'தேவபூமி' என்று அழைக்கப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து உள்ளது.


latest tamil news




போலீசாரின் தகவல்படி குஜராத் மாநிலத்தில் தினமும் குறைந்தபட்சம் 14 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். பாஜ., ஆளும் மேற்கண்ட மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக மாநில அரசுகள் சிறப்பு கூட்டங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்ற நிலையில், சிறப்பு கூட்டம் நடத்த மத்திய பாஜ., அரசு உத்தரவிடவில்லை. ஆனால் தற்போது மஹா.,வில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றவுடன் மாநில அரசு சிறப்புக் கூட்டம் நடத்த பாஜ., வலியுறுத்துவதாக உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:00:27 IST Report Abuse
jayvee நம்ம ஊரு கணக்குப்பிள்ளை ரேஞ்சுக்கு பேசறார் இவர்.. உங்க ஊரிலும் நடக்குது .. எங்க ஊரிலும் நடக்குது .. கணக்கு சரியாப்போச்சு.. என்ற ரீதியில் பேசுகிறார்..
Rate this:
Cancel
22-செப்-202110:31:16 IST Report Abuse
ஆரூர் ரங் மும்பை காமாத்திபுர சிவப்பு விளக்கு பகுதியில் சிவசேனா தாதா😛 ராஜ்ஜியம்தான்
Rate this:
Cancel
22-செப்-202110:31:38 IST Report Abuse
ஆரூர் ரங் PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X