பொது செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாதிகள் நடமாட்டம்? கவர்னருடன் டி.ஜி.பி., சந்திப்பு!

Updated : செப் 23, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை :தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இலங்கை தலைநகர் கொழும்பில், 2019 ஏப்., 21ல், 'ஈஸ்டர்' தினத்தில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.இதில், 359 பேர் கொல்லப்பட்டனர்;
 பயங்கரவாதிகள் நடமாட்டம்? கவர்னருடன் டி.ஜி.பி., சந்திப்பு!

சென்னை :தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில், 2019 ஏப்., 21ல், 'ஈஸ்டர்' தினத்தில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.இதில், 359 பேர் கொல்லப்பட்டனர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலை ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையில், ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் நடத்தியது தெரிய
வந்தது. வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான், தமிழகத்தில் சென்னை மண்ணடி, கோவை; கேரள மாநிலத்தில் பல இடங்களில் தங்கியிருந்ததும், சமூக வலைதளங்கள் வாயிலாக, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை திரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக, தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., அதிகாரிகள், 112 பேரை கைது செய்துள்ளனர் என ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும் கூறியிருந்தார். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான, அல் - ஹிந்த் சார்பில், தென் மாநிலத்தில் சில சதி வேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த அமைப்பை கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்ற பயங்கரவாதி, டில்லியில் தங்கி வழிநடத்துவது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, காஜா மொய்தீன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

சமீபத்தில், பயங்கரவாத செயலுக்கு ஆட்களை திரட்டி வந்த மதுரையை சேர்ந்த முகமது இக்பால் என்ற செந்தில் குமார் கைது செய்யப்பட்டார். பின், இவரது கூட்டாளிகள் கைதாகினர். இவர்களிடமிருந்து சதி திட்டம் குறித்த 30 புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில், கவர்னராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவியை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு நேற்று காலை சந்தித்து பேசினார். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆர்.என்.ரவி, ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். உளவுத் துறையில் சிறப்பு இயக்குனர் உட்பட பல பொறுப்புகளை வகித்தவர். ஒருங்கிணைந்த உளவுத்துறை இயக்குனராகவும்
இருந்தவர். கவர்னர் - டி.ஜி.பி., சந்திப்பின் போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்து, முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
23-செப்-202115:51:05 IST Report Abuse
திரு.திருராம் \\சமீபத்தில், பயங்கரவாத செயலுக்கு ஆட்களை திரட்டி வந்த மதுரையை சேர்ந்த முகமது இக்பால் என்ற செந்தில் குமார் \\\ இதைத்தான் தீவிரவாதத்துக்கு மதம்கிடையாது, இந்து தீவிரவாதம் என லிபரல் அரிதாரநரிகள் கூவுது, நடுசெண்டர் லிக்கர்ஸ் கூவுவது, எல்லாம், அவர்கள் எல்லாம் பணக்கார்கள், சதிதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தப்பிக்கொள்வார்கள், ஆனால் இந்த சதிகளில் சிக்கி மடிவது சாதாரண நடுத்தர ஏழை இந்துக்கள்தான்,
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202113:26:37 IST Report Abuse
jayvee இனிவரும்காலங்களித்தான் தெரியும். போலிசும் அதிகாரிகளும் நாட்டுக்கு அல்லது ஆளுங்கட்சிக்கு மட்டுமா என்று ?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
22-செப்-202121:47:42 IST Report Abuse
BASKAR TETCHANA விடியல் ஆட்சியின் வேழங்களை வெளியில் கொண்டு வர இருவரும் பேசி இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X