ஜெய்ஸ்வால், மகிபால் விளாசல்; கடைசி ஓவரில் வீழ்ந்தது பஞ்சாப்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021
Share
Advertisement
துபாய் : ஜெய்ஸ்வால், மகிபால் விளாசல் கைகொடுக்க, பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 2 ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது.ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல், பீல்டிங் தேர்வு செய்தார்.ஜெய்ஸ்வால் அபாரம்ராஜஸ்தான்
IPL 2021, PBKS vs RR, IPLt20

துபாய் : ஜெய்ஸ்வால், மகிபால் விளாசல் கைகொடுக்க, பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 2 ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல், பீல்டிங் தேர்வு செய்தார்.


ஜெய்ஸ்வால் அபாரம்


ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லீவிஸ் (36) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன் எடுத்தார். லிவிஸ்டன் (25), ஜெய்ஸ்வால் (49) கைகொடுத்தனர். லாம்ரர் (43 ரன், 17 பந்து) வேகமாக ரன்கள் சேர்த்தார். டிவாட்டியா (2), கிறிஸ் மோரிஸ் (5) ஏமாற்ற, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 185 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5, முகமது ஷமி 3 விக்கெட் சாய்த்தனர்.


latest tamil news




அகர்வால் ஆறுதல்


பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் (67), ராகுல் (49) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன் சேர்த்து கைகொடுத்தது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் வெற்றிக்கு கடைசி 15 பந்தில் 10 ரன் தேவைப்பட, எளிதில் வெல்லும் என நம்பப்பட்டது. கடைசி ஓவரில் 4 ரன் தேவை என்ற நிலையில் கார்த்திக் தியாகி கலக்கலாக வீசினார்.

முதல் 2 பந்தில் மார்க்ரம் 1 ரன் எடுத்தார். 3 வது பந்தில் பூரன் (32) அவுட்டானார். 4வது பந்தை வீணடித்த தீபக் ஹூடா (0), 5வது பந்தில் வீழ்ந்தார். கடைசி பந்தையும் கார்த்திக் தியாகி கட்டுக்கோப்பாக வீச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 183/4 ரன் மட்டும் எடுத்தது. மார்க்ரம் (26) அவுட்டாகாமல் இருந்தார். ராஜஸ்தான் அணி 2 ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது. கார்த்திக் தியாகி 2 விக்கெட் சாய்த்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X